ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Pitch Report : அடிலெய்டு பிட்ச் இந்திய அணிக்கு சாதகமா? பாதகமா?

Pitch Report : அடிலெய்டு பிட்ச் இந்திய அணிக்கு சாதகமா? பாதகமா?

அடிலெய்ட் மைதானம்

அடிலெய்ட் மைதானம்

Pitch Report: 14 சர்வதேச டி20 போட்டிகள் அடிலெய்ட்டில் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் போட்டி நாளை அடிலெய்ட்டில் நடைபெறவுள்ள நிலையில் மைதானத்தின் நிலவரம் குறித்து  பார்போம்.

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் அடிலெய்ட்டில் பலப்பரீட்சை நடத்துகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ள குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும், இதனால் இந்த போட்டியில் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. மேலும் அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போழுதும் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும்.

  இந்தியா அணிக்கு அடிலெய்ட் மைதானம் என்பது நமது சொந்த மைதானம் போல குறிப்பாக விராட் கோலி இந்த மைதானத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி 907 ரன்களை குவித்துள்ளார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் 5 சதங்கள் கூட அடங்கும் மேலும் கடைசியாக சூப்பர் -12 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அதனை நிரூபித்தும் இருக்கிறார்.

  இதையும் படிங்க: கோலியின் மற்றோரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

  டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை இரு அணிகளும்  3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் இங்கிலாந்தும் ஒரு முறையும் இந்தியா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகள் அடிலெய்ட்டில் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. அதேபோல் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்துள்ளதால் இந்த போட்டி இந்தியாவுக்கே சதகமாக மாறவே வாய்ப்புள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England