நீ ஒரு உண்மையான மேட்ச் வின்னர்: ரிஷப் பந்த்தை புகழ்ந்து தள்ளும் ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிஸ்ட்.

டெஸ்ட் போட்டியில் இத்தகைய வீரர்களால்தான் ஆட்டம் சுவாரஸ்யமளிப்பதாக மாறும் ராகுல் திராவிட், புஜாரா, சந்தர்பால் ரக வீரர்களினால் டெஸ்ட் போட்டிக்கு வருபவர்கள் குறைந்து போயினர். கபில்தேவ், ஸ்ரீகாந்த், விவ் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், லாரா, சேவாக், கெவின் பீட்டர்சன், ஏ.பி.டிவில்லியர்ஸ், வார்னர், ரிஷப் பந்த் போன்றவர்களால்தான் டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஏறக்குறைய 400 ரன்களுக்கும் மேலான இலக்கை விரட்டி விடுவேன் என்று ஆஸ்திரேலியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து 97 ரன்களை விளாசினார் ரிஷப் பந்த். பிறகு பிரிஸ்பனில் கடைசி நாளில் 329 ரன்கள் இலக்கை விரட்டி வரலாற்று வெற்றி பெறச் செய்தார்.

  இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் இனி நான் பவுலிங் செய்யலமா வேண்டாமா என்று யோசித்ததாகக் கூற வைத்த அதிரடியில் சிக்சர் மழை பொழிந்தார் ரிஷப் பந்த்.

  நேற்று அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 121/5 என்ற நிலையில் 6ம் நிலையில் களமிறங்கி 82 பந்துகளில் அரைசதம் கண்டு அதன் பிறகு உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அதில் அதிர வைக்கும் ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து அசரவைத்து அடுத்த 33 பந்துகளில் சதம் அடித்தார் பந்த், அதுவும் சிக்சரில் சதம் கண்டார்.

  இந்த இன்னிங்ஸ் மூலம் இங்கிலாந்திடமிருந்து வெற்றி வாய்ப்பைப் பறித்துச் சென்றார் ரிஷப் பந்த். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 7ம் நிலையில் இறங்கி இப்படி சதங்களை விளாசியுள்ளார். அதே பாணியில் ரிஷப் பந்த்தை இப்போது அவருடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

  இனி ரிஷப் பந்த்னா ‘பயம்’னு உலகமே சொல்லும் அளவுக்கு அதிரடி வீரராகத் திகழ்கிறார், அதுவும் டெஸ்ட் போட்டியில். டெஸ்ட் போட்டியில் இத்தகைய வீரர்களால்தான் ஆட்டம் சுவாரஸ்யமளிப்பதாக மாறும் ராகுல் திராவிட், புஜாரா, சந்தர்பால் ரக வீரர்களினால் டெஸ்ட் போட்டிக்கு வருபவர்கள் குறைந்து போயினர். கபில்தேவ், ஸ்ரீகாந்த், விவ் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், லாரா, சேவாக், வார்னர், ரிஷப் பந்த் போன்றவர்களால்தான் டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

  அந்த வகையில் ஆடம் கில்கிறிஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பந்த்தின் நேற்றைய சதத்துக்கு புகழாரம் சூட்டுகையில், “அதிக சதங்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல, எப்போது அந்த சதங்களை எடுக்கிறாய் என்பதுதான் விஷயம். சத எண்ணிக்கையுடன் அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் சதம் எடுப்பதையும் இணைத்துக் கொண்டால் நீ ஒரு உண்மையான மேட்ச் வின்னர். உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் ரிஷப் பந்த்” என்று ட்வீட் செய்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: