இன்று இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடப்பதையொட்டி இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ அணுகுமுறை பேசுபொருளாகியுள்ளது, ஆனால் இந்தியாவின் ஆக்டிங் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, நம் பக்கம் தான் சாதகம் உள்ளது என்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பும்ரா கூறும்போது, “இங்கிலாந்து எப்படி ஆடப்போகிறது என்பதில் என் கவனம் இல்லை. எங்களுக்கு எங்கள் பலம் தெரியும். எங்கள் பணியை திறம்படச் செய்தால் நாம் வெல்ல முடியும். இங்கு மட்டுமல்ல எங்கு ஆடினாலும் வெல்ல முடியும்.
எனவே எதிரணி என்ன செய்வார்கள் என்பதைப் பேசி அவர்களுக்கு மனரீதியான ஒரு சாதகத்தை அளிக்க விரும்பவில்லை. நாம் நம் வேலையை சரியாக செய்தால் அனைத்தும் தானாக நடக்கும்.
நான் என் கிரிக்கெட்டை மற்றவர்களை ஒப்பிடும்போது வித்தியாசமாக ஆடுபவன். வேறு எந்த அணி வீரர்களுக்கும் மன ரீதியான சாதக நிலையை அளிக்க விரும்பவில்லை. எங்கள் மனநிலையில் திட்டங்களில் தெளிவாக இருக்கும் போது எங்களை அத்தனை எளிதில் வீழ்த்தி விட முடியாது. இந்த மனநிலையில்தான் இருக்க விரும்புகிறோம்.
இதையும் படிச்சுப் பாருங்க: India vs England test-இங்கிலாந்து எப்படி ஆடினாலும் கவலையில்லை;20விக். வீழ்த்துவோம் - ராகுல் திராவிட் திட்டவட்டம்
தொடரில் நாங்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் நான் கடந்த காலத்தை பார்ப்பவனல்ல. எந்த மேட்சாக இருந்தாலும் வெற்றி பெறவே ஆடுகிறோம், தோற்கவோ அல்லது டிரா செய்யவோ ஆடுவதில்லை. வெற்றிக்காக ஆட விரும்புகிறோம். எங்கள் வேலையில் மூழ்கி முழு கவனத்துடன் ஆடி வெற்றி பெற வந்திருக்கிறோம்” என்றார் பும்ரா.
1983 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் சொன்னார், ‘வீ ஆர் ஹியர் டு வின்’ அதாவது நாங்கள் வெற்றி பெற இங்கு வந்திருக்கிறோம் என்றார், செய்து காட்டினார், அத்தகைய துணிவும் தன்னம்பிக்கையும் பும்ராவிடமும் இந்தப் பேட்டி மூலம் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.