Home /News /sports /

நாயகன் மீண்டும் வர்றார்... சொந்த மண்ணில் இங்கிலாந்தை கதறவிட்ட ரிஷப் பந்தின் சதம்

நாயகன் மீண்டும் வர்றார்... சொந்த மண்ணில் இங்கிலாந்தை கதறவிட்ட ரிஷப் பந்தின் சதம்

India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில், 4 போட்டிகளின் முடிவில், 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக 5-வது போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பின் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் கடைசி போட்டி தொடங்கியுள்ளது.

    இதில், பும்ரா தலைமையில் இந்திய அணி களம் கண்டுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சத்தீஸ்வர் புஜாரா களமிறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் சுப்மன் கில் (17), சத்தீஸ்வர் புஜாரா (13), ஹனும விஹாரி (20) ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சரிவிலிருக்கும் இந்திய அணியை மீட்டெடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் தேவையில்லாத ஷாட் விளையாடி போல்ட்டாகி 11 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்குக்கு 3 பவுண்டரிகளை மட்டும் விளாசி விட்டு 15 ரன்களில் அவுட்டானார்.

    Also Read : இங்கிலாந்து எப்படி ஆடினாலும் கவலையில்லை;20விக். வீழ்த்துவோம் - ராகுல் திராவிட் திட்டவட்டம்

    இந்திய அணி 98 ரன்களில் 5 விக்கெட்களை இழந்த நிலையில் ரிஷப் பந்தும் ரவீந்திர ஜடோஜாவும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 5 விக்கெட்கள் போன நிலையில் தனது அதிரடியில் இருந்து சற்றும் மாறாத பந்த் இங்கிலாந்து பவுலர்களை பதம் பார்க்க ஆரம்பித்தார். இங்கிலாந்தின் வேகத்திற்கு ஏற்ப பேட்டை சுழற்றிய பந்த் பவுண்டரிகளால் அலறவிட்டார்.

    ரிஷப் பந்துக்கு கைகொடுக்கும் விதமாக ரவிந்திர ஜடேஜாவும் சற்றும் சளைக்காமல ஈடுகொடுத்தார். இதனால் ஆமை வேகத்தில் இருந்த இந்திய அணியின் ரன் அடுத்தடுத்து கிடுகிடுவென அதிகரித்தது. ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதம் விளாசினார். ரவிந்திர ஜடேஜாவும் அரைசதம் கடந்தும் இருவரும் அதிரடியில் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி