Home /News /sports /

Ind vs Eng Lunch: புஜாரா, ஷுப்மன் கில் திருந்தவேயில்லை, தயங்கித் தயங்கி ஆடும்இந்தியா 53/2- எட்ஜ்பாஸ்டனில் மழை

Ind vs Eng Lunch: புஜாரா, ஷுப்மன் கில் திருந்தவேயில்லை, தயங்கித் தயங்கி ஆடும்இந்தியா 53/2- எட்ஜ்பாஸ்டனில் மழை

2 விக்கெட்டுகளுடன் இன்னொரு சாதனையை நோக்கி ஆண்டர்சன்

2 விக்கெட்டுகளுடன் இன்னொரு சாதனையை நோக்கி ஆண்டர்சன்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. மழை காரணமாக ஆட்டம் நிற்த்தப்பட்டுள்ளது, இந்திய அணி புஜாரா (13), கில் (17), விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது. 20.1 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. மழை காரணமாக ஆட்டம் நிற்த்தப்பட்டுள்ளது, இந்திய அணி புஜாரா (13), கில் (17), விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்துள்ளது. 20.1 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து 5 ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்தது இங்கிலாந்து, இப்படியிருக்கும் போது பந்தை அடிக்காமல் இடிக்கலாமா? அதுதான் கில்லும், புஜாராவும் செய்தனர்.

    ஹனுமா விஹாரி 14 ரன்களுடனும் விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ், வானிலை மேகமூட்டமாக இருந்ததனாலும், 4வது இன்னிங்சில் விரட்டல் நம்பிக்கையினாலும் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

    ஷுப்மன் கில் மிகவும் பிரிஸ்க்காக தொடங்கினார், ஆண்டர்சனை ஒரு பிளிக்கும், அட்டகாசமான ஆஃப் ட்ரைவும் ஆடி 2 பவுண்டரிகள் அடித்தார், பிறகு ஸ்டூவர்ட் பிராட் குத்திக் காட்டிய போது அலட்சியமாக புல் ஷாட் பவுண்டரி விளாசினார், பிறகு தேர்ட் மேனில் இன்னொரு பவுண்டரியையும் கில் அடித்து 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து அருமையாகவே ஆடி வந்தார்.

    ஆனால் ஆண்டர்சன் வீசிய ஒரு பந்து 4வது ஸ்டம்புக்கு வர ஆடாமல் விட வேண்டிய பந்தை நின்ற இடத்திலிருந்து மட்டையை தொங்க விட்டு எட்ஜ் செய்தார், நேராக கிராலியிடம் கேட்ச் ஆனது. ஷுப்மன் கில் தேவையில்லாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    புஜாரா 2 பவுண்டரிகளுடன் தன் வழக்கமான தடுப்பாட்ட உத்தியுடன் 46 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து மழை வருவதற்கு சற்று முன் ஆண்டர்சன் வீசிய பந்தை ஒருவேளை பேக் அண்ட் அக்ராஸ் போயிருந்தால் ஆடாமல் விட்டிருக்கலாம் அல்லது ஓரளவு தடுத்தாடியிருக்கலாம். பந்து அருமையான பந்து பிட்ச் ஆனபிறகு நேரானது, எட்ஜ் ஆனது கிராலியிடம் கேட்ச் ஆனது.

    இதற்கு முன்புதான் பாட்ஸ் பந்தில் ஹனுமா விஹாரிக்கு எளிதான கேட்சை விட்டார் கிராலி. நல்ல வேளை இல்லையெனில் இப்போது 3 விக்கெட் போயிருக்கும். இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறையும் மாறவில்லை, அதாவது தயங்கித் தயங்கி ஆடும் பழக்கம் இன்னும் போகவில்லை, இப்படி ஆடும் வரை அவர்களின் அவுட்ஸ்விங்கர்கள் நம்மை ஆல் அவுட் செய்யவே செய்யும்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் காலத்துக்கு எதிராக பயணிக்கிறார் 35 வயதுக்கு மேல் 47 போட்டிகளில் 172 விக்கெட்டுகளுடன் கார்ட்னி வால்ஷின் 180 விக்கெட்டுகள் சாதனையையும் நெருங்கி வருகிறார்.  டோனி கிரேக் பாணியில் கூற வேண்டுமெனில் ‘வாட் எ ப்ளேயர்’!
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara, India Vs England, James anderson, Shubman Gill

    அடுத்த செய்தி