இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் எட்ஜ்பாஸ்டனில் 5வது டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் நிலையில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகித்த தொடரின் மீதி டெஸ்ட்டில் இந்தியா வெல்வது கடினம், கடந்த முறையே இந்தியா 5வது டெஸ்ட்டை ஆடியிருந்தால் இங்கிலாந்தை 3-1 என்று தொடரை வென்றிருக்கலாம் என்கிறார் மொயின் அலி.
மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட் ஓய்விலிருந்து மீண்டு வெளியே வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஆடவிருக்கிறார், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், இவரை தனிப்பட்ட முறையில் அழைத்து உன் பாணி ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் பொருத்தமாக இருக்கும் உடனே வா என்று அழைக்க மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட் ஓய்விலிருந்து வெளியே வந்து விட்டார், அதாவது ஓய்வு முடிவை கைவிட்டு விட்டார்.
அவரிடம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட்டில் ஆட முடியாமல் போனால் என்ன செய்யலாம் என்று கேட்ட போது, “கடந்த தொடரில் விராட் கோலிதான் கேப்டனாக இருந்தார், என்னைக் கேட்டால் பேசாமல் அவரை சமாதானப்படுத்தி இந்த ஒரு போட்டிக்கு அவரிடம் கேப்டன்சியை கொடுப்பதுதான் நல்லது.
ஆனால் இந்த முடிவு கோலி எடுக்க வேண்டியதாகும். அவர் இப்போது ரிலாக்ஸாக மகிழ்ச்சியாக, கேப்டனாக இல்லாத தருணத்தை எஞ்ஜாய் செய்து வருகிறார். கோலிக்கு அனுபவம் உள்ளது, நேர்மையாகக் கூறுகிறேன் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய டெஸ்ட், இந்தத் தொடரே ஒரு பெரிய தொடர்.
கடந்த ஆண்டே முடித்து விட்டுச் சென்றிருந்தால் இந்தியா 3-1 என்று வென்றிருக்கும். ஆனால் இப்போது இங்கிலாந்து ஆடும் விதமும் சரி, இந்தியா சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடாததாலும் சரி இந்தியாவுக்கு மிக மிக கடினமாக இருக்கும்.
நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது போல் இங்கிலாந்து ஆடினால் நிச்சயம் இங்கிலாந்துதான் இந்தியாவை வெல்லும்” என்றார் மொயின் அலி.
அலி சொல்வது மிகச்சரியான ஒன்று, விராட் கோலி எப்போதுமே முக்கிய முடிவுகளை நள்ளிரவில்தான் எடுப்பார், அன்றும் அப்படித்தான் எங்கு ஐபிஎல் ஆட முடியாமல் போய் விடுமோ என்று கருதி 5வது டெஸ்ட்டை கோவிட்டை காரணம் காட்டி வேண்டாம் என்று இந்திய அணியை இங்கு அழைத்து வந்தார், இது எத்தனை பெரிய தவறு என்பதை அவரும், இந்திய அணியும் அவ்வாறு தன்னிச்சையாக கோலி தன் அதிகாரத்தைச் செயல்படுத்த அனுமதித்து ஒத்து ஊடிய பிசிசிஐயும் நிச்சயம் வருந்த வேண்டும். ஆனால் எங்கே! இப்போதே தோற்றால் தொடர் சமன் தானே என்ற மைண்ட்-செட்டுக்கு வந்து விட்டார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Moeen ali, Rohit sharma, Virat Kohli