5-வது டெஸ்ட்: இந்தியாவை தோற்கடிக்க அழைக்கப்பட்ட இங்கிலாந்து ஸ்பின்னர்

இங்கிலாந்து அணியில் இன்னொரு ஸ்பின்னர்

ஓல்ட் டிராபர்டில் வரும் 10-ம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  குழந்தை பிறப்புக்காக விடுப்பில் சென்ற விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் சேர்க்கப்பட்டுள்ளதால் மொயின் அலி ஆடுவது கடினம் என்று தெரிகிறது. ஜாக் லீச் பின் வரிசையில் சிறந்த பேட்ஸ்மென் என்பது அனைவரும் அறிந்ததே.

  மொயின் அலியை ரூட் சரியாகப் பயன்படுத்தவில்லை, ஒரு புறம் வேகப்பந்து, மறுபுறம் மொயின் அலி என்று பயன்படுத்தியிருந்தால் ரிஷப் பந்த், ஷர்துல் கூட்டணியை முறியடித்திருக்கலாம் மாறாக அவர் வேகப்பந்து வீச்சை நம்பி அவர்களை களைப்படைய வைத்து விட்டார். இது மிகப்பெரிய தவறு. இந்தத் தவறை அவர் மான்செஸ்டரில் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.

  மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்டையும் வென்று 3-1 என்ற கணக்கில் வெல்ல கோலி படை காத்திருக்கிறது, அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தாலே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும். ஆனால் மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி 4 தோல்வி 5 டிரா என்று சொதப்பியுள்ளது, மாறாக 2000த்திற்குப் பிறகான டெஸ்ட்களில் இங்கிலாந்து மான்செஸ்டரில் வெற்றிகளை குவித்துள்ளது, எல்லாம் பெரிய வெற்றிகள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

  ஜேக் லீச் கடந்த இந்தியா, இலங்கை தொடருக்குப்பின் விளையாடவி்ல்லை என்பதால், இந்த டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4-வதுடெஸ்டில் அணியில் இடம் பெறாத ஜாஸ் பட்லர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

  கடந்த 1986-ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடர்களை இழந்தது இல்லை. ஏற்கெனவே நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்துவிட்டது, இப்போது இந்தியாவிடம் தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

  இங்கிலாந்து அணி வருமாறு:

  ஜோ ரூட்(கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீது, டேன் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்ஸன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: