Home /News /sports /

இந்திய அணியின் அச்சம் ஜேம்ஸ் ஆண்டர்சன்: இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணியின் அச்சம் ஜேம்ஸ் ஆண்டர்சன்: இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குத் திரும்பியுள்ளார், இவரோடு சாம் பில்லிங்ஸும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குத் திரும்பியுள்ளார், இவரோடு சாம் பில்லிங்ஸும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக 3-0 ஒயிட் வாஷ் கொடுத்த இங்கிலாந்து, விராட் கோலி 2-1 என்று வென்று பாதியிலேயே வந்த இங்கிலாந்து அல்ல, இது வேறு இங்கிலாந்து என்பதை இந்த டெஸ்ட்டை ஆடும்போது உணர்வார். மேலும் அப்போது ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட்டிலிருந்து இந்திய அணி கோவிட்டைக் காரணம் காட்டி வந்தது.

    இப்போது கோலி நிச்சயம் உணர்வார், அப்போதே ஆடியிருந்தால் 3-1 என்று பெரிய அளவில் வென்று இங்கிலாந்தில் கொடிநாட்டிய கேப்டனாகியிருக்கலாமே, நம் கேப்டன்சி காலமும் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்குமே என்று நிச்சயம் நினைப்பார்.

    இப்போது இந்திய அணியின் மனநிலையும் வெற்றி மன நிலையில் இல்லை, தோற்றால் என்ன தொடர் 2-2 என்று ட்ரா ஆகும் அவ்வளவுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர், திராவிட் பேச்சும் அந்த ரகத்தில்தான் உள்ளது.

    ரோஹித் சர்மா கோவிட் காரணமாக இந்த டெஸ்ட்டில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இன்னும் எந்தெந்த ‘டாப்’ வீரர்கள் என்னென்ன காரணத்தினால் கழன்று கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை.

    இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணி வித்தியாசமான எதிரணி, ஆனால் எங்கள் ஆக்ரோஷம் சற்றும் குறையாது, இதே மனநிலையில்தான் ஆடுவோம் என்று கூறி இந்திய அணியை பயமுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது:

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஹென்றி புரூக், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரெய்க் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேட் பாட்ஸ், ஆலி போப்
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ben stokes, India Vs England

    அடுத்த செய்தி