முகப்பு /செய்தி /விளையாட்டு / India vs England test-இங்கிலாந்து எப்படி ஆடினாலும் கவலையில்லை;20விக். வீழ்த்துவோம் - ராகுல் திராவிட் திட்டவட்டம்

India vs England test-இங்கிலாந்து எப்படி ஆடினாலும் கவலையில்லை;20விக். வீழ்த்துவோம் - ராகுல் திராவிட் திட்டவட்டம்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

பென் ஸ்டோக்ஸ் தலைமையில், பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியில் புதிய ஆக்ரோஷ இங்கிலாந்து அணியின் புத்தெழுச்சி கண்டு கவலையில்லை, ஒரு டெஸ்ட்டில் நாமும் 20 விக்கெட் எடுக்கிறோம் டெஸ்ட்டை வெல்கிறோம் இதுவும் பாசிட்டிவ் கிரிக்கெட் தான் என்று ராகுல் திராவிட் ரொம்ப பாசிட்டிவ் ஆக கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பென் ஸ்டோக்ஸ் தலைமையில், பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியில் புதிய ஆக்ரோஷ இங்கிலாந்து அணியின் புத்தெழுச்சி கண்டு கவலையில்லை, ஒரு டெஸ்ட்டில் நாமும் 20 விக்கெட் எடுக்கிறோம் டெஸ்ட்டை வெல்கிறோம் இதுவும் பாசிட்டிவ் கிரிக்கெட் தான் என்று ராகுல் திராவிட் ரொம்ப பாசிட்டிவ் ஆக கூறியுள்ளார்.

இன்று மதியம் 3 மணிக்கு ஊதிப்பெருக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இந்திய மைண்ட் செட் போட்டியை ட்ரா செய்வதில்தான் இருக்கும் ஏனெனில் ட்ரா செய்து விட்டால் தொடர் நம்முடையது. வெற்றி பெற ஆடி தோல்வியடைந்தாலும் தொடர் 2-2 என்று சமன் தான், ஆகவே இந்தியாவுக்கு இழக்க ஒன்றுமில்லை என்பது இங்கிலாந்துக்குத்தான் ஆபத்தை அதிகரிக்கிறது, கவலையளிப்பது இந்திய பேட்டிங்தான்.

இது தொடர்பாக ராகுல் திராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அவர்கள் எப்படி ஆடினாலும் நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தொடரில் 2-1 என்று நாம் தான் முன்னிலையில் இருக்கிறோம், அதனால் அவர்கள் எப்படி ஆடினாலும் கவலையில்லை.ஆனால் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கிலாந்து என்ன செய்கிறது என்பது பற்றி கவலையில்லை. இந்திய அணியும் பாசிட்டிவ் அணிதான், கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வதாக வந்தோம், இப்போது கூட அட்டவணயில் டாப் 2 இடங்களுக்குக் கீழ் 3ம் இடத்தில் இருக்கிறோம்.

ஒருடெஸ்ட் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை வெல்கிறோம் இதுவும் பாசிட்டிவ் கிரிக்கெட்தான். ஆனால் அவர்கள் நிச்சயம் தந்திரோபாயம் வைத்திருப்பார்கள். ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் உத்தி மாறவே செய்யும்.

அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு நாமும் பதில்வினை ஆற்ற வேண்டும். நாம் செய்வதில் கவனம் மேற்கொள்ள வேண்டும்” என்றார் ராகுல் திராவிட்.

First published:

Tags: India Vs England, Rahul Dravid