முகப்பு /செய்தி /விளையாட்டு / எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: சதமடித்தார் ரவீந்திர ஜடேஜா

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: சதமடித்தார் ரவீந்திர ஜடேஜா

எட்ஜ்பாஸ்டனில் ஜடேஜா சதம்

எட்ஜ்பாஸ்டனில் ஜடேஜா சதம்

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலன 5வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ரவீந்திர ஜடேஜா தனது 3வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், இந்த ஆண்டில் ஜடேஜாவின் 2வது சதமாகும்.

  • Last Updated :

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலன 5வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ரவீந்திர ஜடேஜா தனது 3வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், இந்த ஆண்டில் ஜடேஜாவின் 2வது சதமாகும்.

ஜடேஜா, பாட்ஸ் வீசிய பந்தை பாயிண்ட் பவுண்டரிக்கு பளார் என்று விரட்ட சதமடித்தார். இதற்கு முதல் பந்தில்தான் ஸ்லிப் கார்டனில் கேட்சை விட்டனர், அதுவு பவுண்டரிக்குப் பறந்தது.

இன்று காலை 83 ரன்களுடன் இறங்கிய ஜடேஜா கொஞ்சம் நிதானித்துப் பிறகு அடிக்க ஆரம்பித்தார். 183 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்டியுள்ளார் ஜடேஜா.

முகமது ஷமி 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து சற்று முன் தேர்ட்மேனில் கேட்ச் ஆகி பிராட் பந்தில் அவுட் ஆனார். கேப்டன் பும்ரா இறங்கியுள்ளார்.

இந்தியா இன்று காலை வந்தட்து முதல் 38 ரன்களை விரைவு கதியில் எடுத்து 371/8 என்று ஆடி வருகிறது. இங்கிலாந்து இப்போது நியூபா எடுத்துள்ளது.

top videos
    First published:

    Tags: England test, India Vs England, Ravindra jadeja