இந்தியாவில் முதல் சதம்; ஆண்டர்சன் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து மெய் சிலிர்க்க வைத்த ரிஷப் பந்த்!

இந்தியாவில் முதல் சதம்; ஆண்டர்சன் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து மெய் சிலிர்க்க வைத்த ரிஷப் பந்த்!

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் 89 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தின் 82வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார்.

  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார் 23 வயதாகும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்துடன் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அனி முதல் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகவே, இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

ஷுப்மன் கில், கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆக, சத்தேஸ்வர் புஜாரா, ரகானே ஆகியோர் குறைந்த ஸ்கோருக்கு ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தத்தளித்து வந்த இந்திய அணியை சதம் விளாசி தூக்கி நிறுத்தியுள்ளார் ரிஷப் பந்த்.

2வது நாளான இன்று டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை ரிஷப் பந்த் விளாசியுள்ளார். மேலும் முதல் முறையாக தாய் மண்ணில் அவர் சதம் கண்டுள்ளார்.

முதலில் தத்தளித்து வந்த இந்திய அணியை கரை சேர்க்கும் விதமாக ரோகித் சர்மாவுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கும் வரை பொறுமையை கையாண்டார். ரோகித் சர்மாவுடன் 41 ரன்கள் பார்னர்ஷிப் போட்டார். ரோகித் சர்மா 49 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் களத்துக்கு வந்த அஸ்வினும் விரைவாகவே வெளியேறினார்.

அரைசதத்தை 82 பந்துகளில் அடித்த ரிஷப் பந்த், அதன் பிறகு அதிரடி பாணியை கையாண்டார்.

இதன் பின்னர் இடக்கை வீரரும் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடிய சக வீரர் வாஷிங்டன் சுந்தரின் ஆதரவுடன் விளையாடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், ஜோ ரூட்டின் பந்தில் சிக்ஸர் அடித்து சதம் அடித்தார். 115 பந்துகளை அவர் சந்தித்திருந்தார்.

சதம் அடித்த ரிஷப் பந்த் வெகு விரைவாகவே விக்கெட்டை தாரை வார்த்தார். 118 ரன்களில் 101 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.ஆட்டமிழக்கும் முன்னதாக ரிஷப் பந்த் 89 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தின் 82வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். அதிலும் இது ஆட்டத்தின் 2வது புதிய பந்தாகும். ரிஷப் பந்த் ஆடிய விதத்தை பார்த்து கிரிக்கெட் ஜாம்பவான்களே அவரை பாராட்டி வருகின்றனர்.
Published by:Arun
First published: