• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Eng, 4th test| ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் இல்லை: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்

Ind vs Eng, 4th test| ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் இல்லை: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்

கோலி-ஜோ ரூட்

கோலி-ஜோ ரூட்

ஓவல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஓவல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ஷமி, இஷாந்த் சர்மா இல்லை இவர்களுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் அணிக்கு வந்துள்ளனர். இங்கிலாந்து அணியில் ஆலி பாப், கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணியில் 4 இடது கை வீரர்கள் இருந்தும் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை, துண்டு துணுக்கு வீரர் ஜடேஜாதான் நீடிக்கிறார். தொடர்ந்து கேள்வி கேட்பார் இல்லாமல் ஒழிக்கப்பட்டு வருகிறார் அஸ்வின்.

    பிட்சில் கொஞ்சம் பசுமை உள்ளது அதனால் ஜோ ரூட் பீல்டிங்கைத் தேர்வு செய்தாரா அல்லது ஓவல் மைதானம் எப்போதும் 2வது இன்னிங்சிலிருந்து பேட்டிங்கிற்கு நன்றாக இருக்கும் என்பதாலா அல்லது கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டதை நினைவில் கொண்டதாலா, அல்லது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி நியூபால் எடுத்தவுடன் 63 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததாலா என்பது தெரியவில்லை.

    ஆனால் தன்னம்பிக்கையுடன் அவர் முடிவெடுத்துள்ளார். முதல் நாளில் பிட்சில் கொஞ்சம் ஈர்ப்பதம் இருக்கும் மேகமூட்ட வானிலையில் பந்து ஸ்விங் ஆகி பிட்ச் ஆகும் போது லேட் ஸ்விங் வாய்ப்புள்ளது. இதனால் ஜோ ரூட் எடுத்திருக்கலாம்.

    ஓராண்டுக்குப் பிறகு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்குள் நுழைந்துள்ளார். ஆண்டர்சனுக்கு ஓய்வு என்பது போல் பாச்சா காட்டி விட்டு அவரை அணியில் வைத்துள்ளனர், அவர் இல்லை என்று செய்திகள் வெளியானால் இந்தியா தன் உத்தியை மாற்றும் அணியை மாற்றும் என்று இங்கிலாந்து நினைத்திருக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், புஜாரா, கோலி, ரகானே, ரிஷப் பந்த், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, உமேஷ் யாதவ், சிராஜ்.

    இங்கிலாந்து: பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரெய்க் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஆண்டர்சன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: