• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்... வானிலை, பிட்ச் எப்படி இருக்கும்?

இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்... வானிலை, பிட்ச் எப்படி இருக்கும்?

ஓவல் மைதானம்

ஓவல் மைதானம்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

  • Share this:
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரகானே ஆகியோரின், மோசமான பார்ம் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தமிழக வீரர் அஷ்வின் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாட் இந்திய அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு உள்ளதாக, பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பிலும் விளையாடும் லெவனில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Also Read : 4-வது டெஸ்ட்: இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்?- லெவன் என்ன?

    வானிலை ரிப்போர்ட்

    லண்டன் வானிலையின் படி, டெஸ்ட் போட்டி ஆரம்பித்த முதல் 3 நாட்கள் மேகமூட்டமாக இருக்கும். அவ்வப்போது சூரிய ஒளி வந்துப்போகும். மேகமூட்டத்துடன் சூரிய ஒளி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாள் குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஐந்தாவது நாள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேக மூட்டம் அதிகமாக இருந்தால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மேகமூட்டத்துடன் காற்றுவீசுவதால் அதற்கெற்ப பந்துவீச நேரிடும்.

    Also Read : ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள்: ரூ.5,000 கோடி ஈட்டும் பிசிசிஐ

    பிட்ச் ரிப்போர்ட்

    லண்டன் ஓவல் மைதான ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். வானிலை மேக மூட்டத்துடன் மழை குறுக்கிடும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும். வானிலை காரணமாக பிட்ச் வேகப்பந்தாளர்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டியின் கடைசி இரண்டு நாட்கள் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: