விராட் கோலி புதிய மைல்கல்: சச்சின் சாதனையை முறியடித்தார்

கோலி-ரகானே.

சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை வேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

 • Share this:
  சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை வேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

  சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்கள் மைல்கல்லை கடினமான நிலையில் இந்திய அணி ஓவலில் திண்டாடி வரும் நிலையில் எட்டியுள்ளார் கோலி. 490வது சர்வதேச இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்ட மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்ஸ்களில் இதே மைல்கல்லை எட்டினார்.

  Also Read: தினேஷ் கார்த்திக் நம்பிக்கையைப் பொய்க்கச் செய்த விராட் கோலி

  23,000 ரன்களை எடுத்த 7வது வீரர் ஆவார் விராட் கோலி. ரிக்கி பாண்டிங் 544 இன்னிங்ஸ்களிலும் ஜாக் காலிஸ் 551 இன்னிங்ஸ்களிலும் குமார் சங்கக்காரா 568 இன்னிங்ஸ்களிலும் ராகுல் திராவிட் 576 இன்னிங்ஸ்களிலும் மகேலா ஜெயவர்தனே 645 இன்னிங்ஸ்களிலும் 23,000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளனர்.

  Also Read: சுத்தப் பைத்தியக்காரத்தனம்: அஸ்வின் விவகாரத்தில் மைக்கேல் வான் தாக்கு
   ஓவல் டெஸ்ட் போட்டியில் தற்போது விராட் கோலி சிலபல பிரமாதமான ராஜ கவர்ட்ரைவ்களுடன் 45 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். 22 ரன்களில் இருந்த போது வெளியே போகும் வோக்ஸ் பந்தை நோண்டி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார், ரூட் அதைக் கோட்டை விட்டார். ஒரு லக்கி இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது.

  ரகானே ஒரு எல்.பி. அவுட் கொடுக்கப்பட்ட பிறகு ரிவியூவில் தப்பினார். அவர் 12 பந்துகளில் 1 ரன்னுடனும் திணறி வருகிறார். விராட் கோலி பேட்டிங் நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னால் இறக்கப்பட்ட ஜடேஜா தாங்கவில்லை வோக்ஸ் பந்தை எட்ஜ் செய்து 10 ரன்களில் வெளியேறினார் ஜடேஜா.

  தொடகக்தில் அதே பார்முலாவில் ரோகித் சர்மா, ராகுல், புஜாரா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
  Published by:Muthukumar
  First published: