நிரூபித்த உமேஷ் யாதவ்: 150 டெஸ்ட் விக்கெட்டுகள் மைல்கல்லைக் கடந்தார்

உமேஷ் யாதவ்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் தனது 150வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ்.

 • Share this:
  விராட் கோலியின் திருவிளையாடல்களில் தென் ஆப்பிரிக்காவில் தொடர் முழுதும் உட்கார வைக்கப்பட்டார், இந்தத் தொடரிலும் 4வது மேட்சில் வாய்ப்பு கொடுத்தார் விராட் கோலி, இவரது அணித்தேர்வு முறைகள் கேள்வி கேட்பாரற்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் கிடைத்த அரிய வாய்ப்பையும் உமேஷ் யாதவ் தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் வீசி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஜோ ரூட்டை நேற்று வீழ்த்திய போது 149வது விக்கெட்டைக் கைப்பற்றிய உமேஷ் யாதவ் இன்று வந்தவுடன் கிரெய்க் ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தி 150வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

  தனது 49வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் 150வது விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு 150வது விக்கெட்டை கொண்டாடும் விதமாக மிக முக்கிய விக்கெட்டான டேவிட் மலானையும் வீழ்த்தினார்.

  கிரெய்க் ஓவர்டன் ஷார்ட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்றார் பந்து எழும்பியது எட்ஜ் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். டேவிட் மலான் 32 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை அவர் ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் அவர் ஷாட் ஆடவும் முயற்சி செய்யவில்லை. சும்மா தொடலாமா வேண்டாமா என்பது போல் ஆடினார் பந்து எட்ஜ் ஆகி ரோகித் சர்மாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. இது 151வது விக்கெட்.

  உமேஷ் யாதவ் 13 ஓவர் 2 மெய்டன் 49 ரன்கள் 3 விக்கெட். பும்ரா டைட்டாக வீசுகிறார் ஒரு பவுன்சரில் ஆலி போப் ஹெல்மெட்டைப் பதம்பார்த்தார். ஆலி போப் 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்கிறார், ஜானி பேர்ஸ்டோ 31 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ் 5 ஓவர் 24 ரன்கள் கொடுக்க ஷர்துல் தாக்கூர் 8 ஓவர் 30 ரன்கள் கொடுத்துள்ளார். ஆலி போப் ஷர்துல் தாக்கூரை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார்.
  Published by:Muthukumar
  First published: