• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நோ-லாஸ்? இல்லையே லாஸ் ஆயிட்டீங்களே- கிண்டலடித்த ரசிகர்களுக்கு சிராஜ் பதிலடி

நோ-லாஸ்? இல்லையே லாஸ் ஆயிட்டீங்களே- கிண்டலடித்த ரசிகர்களுக்கு சிராஜ் பதிலடி

ஸ்கோர் கேட்டு கேலி  செய்த ரசிகர்களுக்கு சிராஜ் ருசிகர பதிலடி

ஸ்கோர் கேட்டு கேலி செய்த ரசிகர்களுக்கு சிராஜ் ருசிகர பதிலடி

ஹெடிங்லேயில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 120/0 என்று முடிந்தவுடன் ஸ்கோர் என்ன என்று ரசிகர்கள் சிராஜிடம் கேட்டு கேலி செய்தனர், அதற்கு சிராஜ் அளித்த பதில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

  • Share this:
    ஹெடிங்லேயில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 120/0 என்று முடிந்தவுடன் ஸ்கோர் என்ன என்று ரசிகர்கள் சிராஜிடம் கேட்டு கேலி செய்தனர், அதற்கு சிராஜ் அளித்த பதில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

    ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று 78 ரன்களுக்குச் சுருண்டது. ரோகித் சர்மா, ரகானே மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர். மற்றபடி எல்லாம் ஒற்றை இலக்கம்தான், ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் சேர்த்தது.

    இதையும் படிச்சுப் பாருங்க: India vs England| முகமது சிராஜ் மீது மீண்டும் தாக்கு: பந்தை எறிந்த பார்வையாளர்கள்- கோலி ஏமாற்றம்

    கடந்த போட்டியில் கடும் தோல்வி அடைந்ததை விட இந்திய அணியின் ஏச்சும் பேச்சும் இங்கிலாந்து அணியை மட்டுமல்ல ரசிகர்களையும் உசுப்பேற்றி விட்டது. இதில் சிராஜிடம் ரசிகர்கள் நேற்று கடைசியில் ஸ்கோர் என்ன தெரியுமா என்று கேட்க சிராஜ் அதற்கு 1-0 என்று இந்தியா தொடரில் முன்னிலை வகிப்பதை பதிலாகக் கூறி ருசிகரமாகா பதிலடி கொடுத்தார்.



    விராட் கோலி கேப்டன் ஆனதிலிருந்தே களத்தில் கிரிக்கெட் நடக்கிறதோ இல்லையோ சேட்டைகளும், உணர்ச்சி வெளிப்பாடுகளும் கோணங்கித்தனங்களும் பெருத்து விட்டன, இது கோலியின் கவனத்தை சிதறடிப்பதால்தான் அவரால் பேட்டிங்கில் கால் நகர்த்த முடியவில்லை. டக் அடிக்கிறார். இதுவரை இங்கிலாந்தில் 69 ரன்களைத்தான் அவர் இந்தத் தொடரில் எடுத்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘கோலியா இதோ வந்துட்டேன்னு சொல்லு’ என்ற ரீதியில் தன் செல்லப்பிள்ளையாக அவுட் ஆக்கிக் கொண்டேயிருக்கிறார்.

    இந்திய அணி மொத்தமாக 78 ரன்களுக்கு சுருள இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் அரைசதம் எடுத்து ஸ்கோரை 120/0 என்று கொண்டு சென்றனர்.

    இதைத்தான் நோ-லாஸ் என்று ரசிகர்கள் உணர்த்தும் விதமாக சிராஜிடம் ஸ்கோர் என்ன என்று கேட்க அவரும் 1-0, அதாவது தொடரில் இந்தியா முன்னிலை என்பதை பதிலாக அளித்தார்.

    ஒருவேளை இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்தான் அவர் மீது பந்தை எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்களோ என்னவோ?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: