முகப்பு /செய்தி /விளையாட்டு / India vs England, 3rd test: இங்கிலாந்து அணியில் ஹோல்சேல் சேஞ்ச்!

India vs England, 3rd test: இங்கிலாந்து அணியில் ஹோல்சேல் சேஞ்ச்!

3வது டெஸ்ட்டில் அறிமுகமாகும் வேக பவுலர் சாகிப் மக்மூத்

3வது டெஸ்ட்டில் அறிமுகமாகும் வேக பவுலர் சாகிப் மக்மூத்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் காயமடைந்து 3வது டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலையில் சாகிப் மக்மூது என்ற புதிய வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமாகிறார் என்று கேப்டன் ஜோ ரூட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் காயமடைந்து 3வது டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலையில் சாகிப் மக்மூது என்ற புதிய வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமாகிறார் என்று கேப்டன் ஜோ ரூட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

சிப்லி நீக்கப்பட்டதால் ஹமீத் ஹசீப், ரோரி பர்ன்ஸ் தொடக்கத்தில் இறங்குவார்கள் என்றும் டேவிட் மலான் அணியில் இடம்பெறுவார் என்றும் ஜோ ரூட் கூறியுள்ளார்.

ரூட்டுக்குப் பதில் அணிக்குள் வரும் சாகிப் மக்மூத் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெயர் பெற்றார். இதுவரை 7 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

Also Read: India vs England, 3rd Test:மைன்ட் கேமில் இன்ட்ரெஸ்ட் இல்ல- ரகானே

மக்மூத் நல்ல உடல் வாகு அமைந்தவர், யார்க்கர் முதல் பவுன்சர்கள் வரை ஸ்விங் பந்துகள் என்று பல்நோக்கு திறன் கொண்டவர். அதே போல் டேவிட் மலான் 3ம் நிலையில் களமிறங்க வாய்ப்பு என்று ஜோ ரூட் தெரிவித்தார்.

அதே போல் கிரெய்க் ஓவர்டன், ஆலி போப் ஆகியோரும் அணிக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: India vs England| பட்டது போதும், இனி இந்திய வீரர்களுடன் வாக்குவாதம் இல்லை- அரண்டு போன ஜோ ரூட்

இங்கிலாந்து அணி பேட்டிங் பலவீனமானது. ஜோ ரூட் ஆடவில்லை எனில் அந்த அணி 50 ஓவர்கள் தாங்காது, அதுவும் இந்த ஆக்ரோஷ இந்தியப் பந்து வீச்சின் முன் சரணடைந்து விடுகின்றனர்.

19 ஆண்டுகளாக ஹெடிங்லீயில் இந்திய அணி ஆடியதில்லை, இந்த மைதானத்தில் இங்கிலாந்து இந்த மைதானத்தில் 3-2 என்று வெற்றி விகிதம் வைத்துள்ளது. 1979-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ட்ரா ஆனது. 1986-ல் இந்தியா ஹெடிங்லேயில் 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 2002-ல் இந்திய அணி இங்கு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2002-ல் தான் இந்திய அணி இங்கு கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடியது.

First published:

Tags: India Vs England, Test match, Test series