India vs England, 3rd test: கடுப்பான விராட் கோலி- என்னிடம் இப்படிக் கேட்கலாமா?

விராட் கோலி

இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இல்லை எனவே நாம் இந்தத் தொடரை வெல்ல முடிவது சுலபம் இல்லையா என்ற தொனியில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘இது சரியான கேள்வி அல்ல’ இப்படிக் கேட்கக் கூடாது என்று கடுப்படித்தார்.

  • Share this:
    இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இல்லை எனவே நாம் இந்தத் தொடரை வெல்ல முடிவது சுலபம் இல்லையா என்ற தொனியில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘இது சரியான கேள்வி அல்ல’ இப்படிக் கேட்கக் கூடாது என்று கடுப்படித்தார்.

    இன்று தொடங்கும் 3வது டெஸ்ட் தொடர்பாக விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது:

    கேள்வி: இங்கிலாந்தில் முக்கிய வீரர்கள் இல்லாத இந்தத் தருணத்தில் அந்த அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி தொடரை வெல்ல வேண்டிய தருணம் இல்லையா?

    விராட் கோலி: இது எதிரணியின் பலத்தை நம்பியிருக்கிறதா என்ன? முக்கியமான வீரர்கள் அந்த அணியில் ஆடினாலும் நாம் வீழ்த்த முடியும், எந்த அணியையும் வீழ்த்த முடியும். எதிரணியினர் பலவீனமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. பிரமாதமான ஒரு கிரிக்கெட்டை ஆடிவரும் இந்திய அணி குறித்து இப்படிப்பட்ட கேள்வி சரியான கேள்வி அல்ல.

    Also Read: ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு - விசாரணையை தள்ளிவைத்த நீதிமன்றம்

    கடந்த சில ஆண்டுகளாக நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். அதனால் எதிரணி பலவீனத்தினால்தான் தொடரை வெல்ல முடியும் என்பது அல்ல. நாங்கள் அப்படி இந்த தொடரை அணுகவில்லை.

    கேள்வி: லார்ட்ஸ் வெற்றி எப்படி மன நிறைவை அளித்தது?

    விராட் கோலி: முதல் டெஸ்ட் போட்டியில் 5ம் நாள் ஆட்டம் நடைபெறாமல் போனது பற்றி நாங்கள் ஏமாற்றமடைந்தோம். 9 விக்கெட்டுகள் இருக்கிறது 150 ரன்கள் தேவை. நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். 2வது டெஸ்ட் போட்டியில் இதே மன நிலையுடன் வெற்றி பெறுவதற்கான விருப்புறுதியுடன் களமிறங்கினோம்.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் மாற்றங்கள் திருப்தி அளித்தன. நம்மை உணர்வு ரீதியாகத் தூண்டினால் இந்த அணி பின் வாங்காது என்பதை நிரூபித்தோம். ஒன்றாக இணைந்து வெற்றிக்காகவே ஆடுவோம். எந்த எதிரணியும் எங்களை எளிதாக எடைபோட அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கும் தெரியும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கண்டுப்பிடித்து வெற்றி பெறும் வழிவகைகளைத் தேடிப்பிடித்து ஆடுவோம் என்பது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அணியை மாற்றும் எண்ணமில்லை. மாற்றுவதற்கான காரணங்கள் இல்லை. காயங்கல் எதுவும் இல்லை. வெற்றிக் கூட்டணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றிக்குப் பிறகு வீரர்கள் இன்னும் உற்சாகத்துடனும் துடிப்புடனும் இருக்கின்றனர், எனவே மாற்ற வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.
    Published by:Muthukumar
    First published: