Home /News /sports /

India vs England| முகமது சிராஜ் மீது மீண்டும் தாக்கு: பந்தை எறிந்த பார்வையாளர்கள்- கோலி ஏமாற்றம்

India vs England| முகமது சிராஜ் மீது மீண்டும் தாக்கு: பந்தை எறிந்த பார்வையாளர்கள்- கோலி ஏமாற்றம்

சிராஜ்

சிராஜ்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய வெற்றியில் முக்கியப் பங்காற்றிய முகமது சிராஜ் மீது மீண்டும் பார்வையாளர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டினர்.

  • Cricketnext
  • 1 minute read
  • Last Updated :
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய வெற்றியில் முக்கியப் பங்காற்றிய முகமது சிராஜ் மீது மீண்டும் பார்வையாளர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டினர்.

    ஆஸ்திரேலியாவில் சிட்னியில் சிராஜ் பெயரைச் சொல்லி அவரை அவமானபடுத்திய பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர தடை செய்யப்பட்டனர். இங்கிலாந்து வாரியமும் அதைச் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    Also Read: கோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்

    நேற்று ஹெடிங்லேயில் 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 78 ரன்களுக்குச் சுருண்டது. மீண்டும் இங்கிலாந்து ஆடிய போது பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ் மீது பார்வையாளர்கள் சிலர் பந்தை தூக்கி எறிந்தனர்.

    Also Read: Virat Kohli| கோலியை வீழ்த்தி பழிதீர்த்த ஆண்டர்சன்: இது உன் 'பேக்யார்டா’ என்று கேட்ட கோலிக்கு பதிலடி

    இது தொடர்பாக நடந்ததை இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறும்போது, “ரசிகர்கள் பகுதியிலிருந்து யாரோ பந்தை சிராஜ் மீது விட்டெறிந்தார். அதனால் கோலி கடும் ஏமாற்றமடைந்தார். என்ன வேண்டுமானாலும் கத்தலாம், வீரர்களை நோக்கி எது வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் கண்டதையும் கொண்டு எறியக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல” என்று கூறினார் ரிஷப் பந்த்.

    லார்ட்ஸ் டெஸ்டின் போதும் சீசாக்களின் கார்க்குகள் சில பீல்டர்கள் மீது விட்டெறியப்பட்டதையடுத்து கோலி புகார் செய்தார். சில கார்க்குகள் கே.எல்.ராகுல் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் விழுந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் முகமது சிராஜை குறிவைத்து பார்வையாளர்கள் தாக்கி வருவது என்னவென்பது புரியாத புதிராக உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Mohammed siraj

    அடுத்த செய்தி