Home /News /sports /

India vs England, 3rd test: ராகுல் டக் அவுட், புஜாரா 1 ரன்னில் நடையைக் கட்டினார்- ஆண்டர்சன் அபாரம்

India vs England, 3rd test: ராகுல் டக் அவுட், புஜாரா 1 ரன்னில் நடையைக் கட்டினார்- ஆண்டர்சன் அபாரம்

ஆன்டர்சன்

ஆன்டர்சன்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஹெடிங்லீயில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ராகுல், புஜாரா விக்கெட்டுகளை இழந்து 4/2 என்று தடுமாறுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஹெடிங்லீயில் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ராகுல், புஜாரா விக்கெட்டுகளை இழந்து 4/2 என்று தடுமாறுகிறது.

    ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுக்க, ராகுல் வந்தார், 3 இன்ஸ்விங்கருக்குப் பிறகு ஒரு பந்தை அதே லெந்தில் வெளியே ஸ்விங் செய்தார் ராகுல் தவறாக அந்தப் பந்தை டிரைவ் ஆடப் போய் எட்ஜ் ஆகி பட்லர் கையில் பந்து தஞ்சமடைய டக் அவுட்.

    Also Read: India vs England,3rd test: 4-வது இன்னிங்ஸ் பேட்டிங் சொர்க்கபுரி பிட்சில் இந்தியா முதலில் பேட்டிங்

    இதே பாணியை சஞ்சய் மஞ்சுரேக்கர் வர்ணனையில் அப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தார், 3 இன்ஸ்விங்கர், ராகுல் வாட்ச் அவுட் என்றார் ஆனால் வாட்ச் அவுட் என்பது ராகுல் அவுட்டில் முடிந்தது.

    புஜாரா இறங்கினார், அவருக்கும் இதே இன்ஸ்விங்கர் அவுட் ஸ்விங்கர் விளையாட்டு காட்டினார் ஆண்டர்சன், ஒரு பந்து பின் தொடையில் வாங்கினார் புஜாரா.

    3 ஸ்லிப்களுடன் ஒரு ஷார்ட் லெக், கல்லி என்று ஆண்டர்சன் அட்டாக் செய்தார்.

    மீண்டும் அடுத்த ஓவரில் வீச வந்த ஆண்டர்சன் ஏற்கெனவே பந்து எப்படி ஸ்விங் ஆகும் என்பதில் ஏகப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்திய ஆண்டர்சன் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை பிட்ச் செய்து சற்றே வெளியே எடுத்தார் லேட் ஸ்விங், புஜாரா எட்ஜ் செய்தார் பட்லரிடம் தஞ்சம். புஜாரா ஒரு ரன்னில் வெளியேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போது கோலி 3 ரன்களுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, James anderson

    அடுத்த செய்தி