Virat Kohli| கோலியை வீழ்த்தி பழிதீர்த்த ஆண்டர்சன்: இது உன் 'பேக்யார்டா’ என்ற கேட்ட கோலிக்கு பதிலடி

கோலியை மீண்டும் வீழ்த்தினார்ஆண்டர்சன்.

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை மீண்டும் வீழ்த்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  • Share this:
    இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை மீண்டும் வீழ்த்தி தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இதன் மூலம் இந்திய டாப் ஆர்டர் ராகுல், புஜாரா, கோலி ஆகியோரை பெவிலியன் அனுப்பி 6 ஓவர் 3 மெய்டன் 6 ரன் 3 விக்கெட் என்று அசத்தி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    கடந்த டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பிட்சைச் சேதம் செய்கிறார் என்ற சந்தேகத்தில் அவரிடம் வறண்டை இழுத்த கோலி அவரிடம் இது உன் வீட்டுக் கொல்லைப் புறம் அல்ல என்று வசை பாடினார், அதோடு அவருக்கு பவுன்சர்களாக வீசச் செய்து காயப்படுத்தும் முயற்சிக்கு பும்ராவை இழுத்ததும் விராட் கோலிதான். இது போன்ற விஷயங்கள் தன் சொந்த ஆட்டத்தை காலி செய்வதை கோலி எப்போது உணரப்போகிறார் என்பது தெரியவில்லை.

    இதையும் படிங்க: India vs England, 3rd test: ராகுல் டக் அவுட், புஜாரா 1 ரன்னில் நடையைக் கட்டினார்- ஆண்டர்சன் அபாரம்

    அதற்கெல்லாம் பதிலடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து இன்று பேசுகிறது, பிட்சில் ஒன்றுமில்லை, புதிய பந்து, இந்திய டாப் ஆர்டரின் மிகவும் பிரசித்தி பெற்ற பலவீனம்தான் ஒன்றிரண்டு ஓவர்கள், அல்லது ஒன்றிரண்டு பந்துகளை ஒருமாதிரி வீசி விட்டு இன்னொன்றை அதே லெந்தில் வேறு மாதிரி வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் நிற்க மாட்டார்கள் என்பது தெரிந்து ஆண்டர்சன் பிரமாதமாக வீசுகிறார்.

    நியூசிலந்து ஸ்விங் மேதை ரிச்சர்ட் ஹாட்லியை நினைவூட்டும் ஒரு பந்து வீச்சாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சு இருக்கிறது.

    கோலி முதலில் ஒரு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் 3 ரன்கள், பிறகு பிளிக் பவுண்டரி, அதன் பிறகு ஒரு பந்தை ஆண்டர்சன் டிரைவ் லெந்தில் வீசினார், இன்னும் முன்னால் வீசினார் கோலி அதை ஆடித்தான் ஆகவேண்டும், ஆடினார் ஆனால் பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் எடுத்தது 7 ரன்களில் வெளியேறினார். மிகவும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    ஆண்டர்சன் புஜாராவை 22 போட்டிகளில் 10 முறை வீழ்த்தியுள்ளார், சச்சின் டெண்டுல்கரை 14 முறைகளில் 9 முறை வீழ்த்தியுள்ளார், விராட் கோலியை 23 மேட்ச்களில் 7 முறை வீழ்த்தியுள்ளார். இந்திய டாப் ஆர்டருக்கு எதிராக ஆண்டர்சன் டாப் ரெக்கார்ட் வைத்துள்ளார்.

    இப்போது ரோகித் சர்மா 9 ரன்களுடன் ஆடி வருகிறார். ரகானே ரன் எடுக்கவில்லை. ரோகித் சர்மாவையும் ஆட்டிப்படைத்து வருகிறார் ஒரே ஓவரில் ஆண்டர்சன் வீசிய 3 பந்துகளை அவர் அப்டமன் கார்டில் வாங்கினார் ரோகித் சர்மா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் பிட்ச் போகப்போக பேட்டிங் சொர்க்கபுரியாக மாறும் அப்போது நல்ல ரன் எண்ணிக்கையை எடுக்கவில்லை எனில் இங்கிலாந்து கை ஓங்கவே செய்யும்.
    Published by:Muthukumar
    First published: