• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரன்கள் எடுக்க வேண்டும் என்று கோலிக்கும் கூட விருப்பம் இருக்கும்: முட்டுக் கொடுக்கும் அகார்க்கர்

ரன்கள் எடுக்க வேண்டும் என்று கோலிக்கும் கூட விருப்பம் இருக்கும்: முட்டுக் கொடுக்கும் அகார்க்கர்

கோலி

கோலி

கோலி ரன்கள் எடுக்க வேண்டும் எனில் கவனத்தைத் சிதற விடாமல் இருக்க வேண்டும், மைதான சேட்டைகளில் கவனம் செலுத்தி டான்சிங் ரோஸ் ஆகி தோற்பதை விட அவர் சேட்டையைக் குறைத்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் ரன்கள் எடுக்கலாம்.

  • Share this:
கோலி ரன்கள் எடுக்க வேண்டும் எனில் கவனத்தைத் சிதற விடாமல் இருக்க வேண்டும், மைதான சேட்டைகளில் கவனம் செலுத்தி டான்சிங் ரோஸ் ஆகி தோற்பதை விட அவர் சேட்டையைக் குறைத்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் ரன்கள் எடுக்கலாம்.

பேட்டிங் தோல்வி அடையும் போது அவரது மன நிலை சிதறி மற்ற விஷயங்களில் கவனம் அதிகம் ஏற்படுகிறது. பேட்டிங் ஆட தொடங்கிவிட்டால் அவர் இன்னும் கொஞ்சம் நல்ல முறையில் கூட மைதானத்தில் நடந்து கொள்வார்.

ஆக்ரோஷம் என்பது பற்றிய ஆஸ்திரேலிய புரிதலை கோலி தப்பும் தவறுமாகப் புரிந்து வைத்துள்ளார். அவர்களெல்லாம் வாய்ப்பேச்சோடு சரி, மற்றபடி தங்கள் சேட்டைகளை, வசைகளை தங்கள் உடலுக்குள், மனத்துக்குள் செலுத்திக் கொள்ள மாட்டார்கள், சொந்த ஆட்டத்தில் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் கோலியிடம் அது போய் விட்டது, சச்சின் டெண்டுல்கர் கூறுவது போல் பேட்டிங்கில் அவர் இறங்கும் போது ஏகப்பட்ட யோசனைகள், எண்ணங்கள் அவரை அமிழ்த்தி விடுகின்றன. இந்நிலையில் கோலிக்கும் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் என்று அஜித் அகார்க்கர் பெரிய கண்டுப்பிடிப்பு போல் கூறியுள்ளார்.

காரணம் அகார்க்கருக்கு கோலியை விமர்சனம் செய்ய முடியாது, பிறகு சேனல்கள் அவரை அழைக்காது. அதனால் இப்படிக் கூறுகிறார். எந்த பேட்ஸ்மெனுக்குத்தான் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை, விருப்பம் இருக்காது? இது ஏதோ கோலியின் விசேடத் தன்மை என்பது போல் அஜித் அகார்க்கர் கூற வேண்டும்.

அகார்க்கர் கூற வருவது இதுதான்:

"2018 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர்களின் முக்கியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி ரன் சேர்த்தார். இந்தத் தொடரைப் பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சிறந்த பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது டெஸ்ட்டில் போராடி 40 ரன்கள் சேர்த்தார். ஆஃப் ஸ்டெம்பைத் தாண்டி ஆஃப் ஸைடில் அவுட் ஸ்விங்கர் பந்து வீசும்போது கண்டிப்பாக ஒரு பேட்ஸ்மேன் அதைத் தொட முயன்று எட்ஜ் ஆகும். பந்து நன்றாக வேகமும், ஸ்விங்கும் ஆகும் களங்கள் இவை. நான்காவது ஸ்டெம்ப் என்கிற அந்தப் பகுதியில் வீசுவது கிட்டத்தட்ட அத்தனை பேட்ஸ்மேன்களுக்குமே ஆடுவது கடினம்தான்.

அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கரனின் பந்து வீச்சும் சரியாக அவரை ஏமாற்றியது. ரன்கள் எடுக்க வேண்டும் என்று கோலிக்கும் கூட விருப்பம் இருக்கும். இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் போதுமான ரன்களைச் சேர்த்துவிட்டார். ரன்கள் எடுக்காதபோது, அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற முனைப்பு இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ஆர்வம் மிகுதியாய்ப் போனதன் விளைவாக ஆட்டம் இழந்திருக்கலாம். அதற்காக வெறும் மூன்று இன்னிங்ஸில் அவர் சரியாக ஆடவில்லை என்று அவரை ஒதுக்கிவிட முடியாது. அவர் இன்றைய நவீன கிரிக்கெட்டின் உயர்ந்த ஆட்டக்காரர்" என்று கூறியுள்ளார் அஜித் அகார்க்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: