• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Joe Root| இந்திய பவுலர்களை திகைப்பில் ஆழ்த்திய ஜோ ரூட்: ஹாட்ரிக் சதம்; ஆண்டில் 6 சதங்கள்

Joe Root| இந்திய பவுலர்களை திகைப்பில் ஆழ்த்திய ஜோ ரூட்: ஹாட்ரிக் சதம்; ஆண்டில் 6 சதங்கள்

ஹாட்ரிக்  சதமடித்த ஜோ ரூட்.

ஹாட்ரிக் சதமடித்த ஜோ ரூட்.

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 423/8. இந்தியாவைக் காட்டிலும் 345 ரன்கள் முன்னிலை.

  • Share this:
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 423/8. இந்தியாவைக் காட்டிலும் 345 ரன்கள் முன்னிலை.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 165 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் என்று 73.33% ஸ்ட்ரைக் ரேட்டில் 23வது சதத்தை எடுத்தார். இந்த ஆண்டின் அதிக சதங்களாக 6 வது சதத்தை எடுத்தார், இந்தத் தொடரில் ஹாட்ரிக் சதம். அலிஸ்டர் குக் சாதனையான ஒரு காலண்டர் ஆண்டில் எடுத்த அதிக ரன்களையும் எடுத்து சாதனை மேல் சாதனையாகக் குவித்து வருகிறார்.



2013ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தின் டாப் ஆர்டர் 4 பேர் அரைசதம் அடித்தனர். டேவிட் மலான் 70 ரன்களை மிகப்பிரமாதமாக எடுத்தார். ஹசீப் ஹமீது 68 ரன்களையும், ரோரி பர்ன்ஸ் 61 ரன்களையும் எடுத்தனர். ஜோ ரூட் உண்மையில் திகைப்பில் ஆழ்த்தினார். 165 பந்துகளில் 2 முறைதான் பீட்டன் ஆனார். 3வது முறை பீட்டன் ஆனபோது பும்ராவின் பெரிய இன்ஸ்விங்கர் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஓவர்டன் 24 ரன்களுடனும் ஆலி ராபின்சன் ரன் எடுக்காமல் நாட் அவுட்டாக இருந்தார்.

120/0 என்று இங்கிலாந்து தொடங்கியது. முதல் நாளை விட 2ம் நாள் இந்திய பவுலர்கள் நல்ல லைன் மற்றும் லெந்தில் வீசினர். டைட்டாக வீசினர். முகமது ஷமி இந்தப் பிட்சில் எப்படி வீசுவது என்பதை அறிந்திருந்தார். ரோரி பர்ன்ஸ் ஷமியின் அருமையான உள்ளே வந்த பந்தில் பவுல்டு ஆனார். ஹசீப் ஹமீது முதல் நாள் நன்றாக ஆடி 2ம் நாள் ஆட்டத்தில் வரிசையாக 28 பந்துகள் டாட் பால்களைச் சந்தித்தார். கடைசியில் ஜடேஜாவின் ஒரு பந்து ஆர்ம் பாலாக வர பவுல்டு ஆனார்.

ரூட், மலான் பிரமாத பேட்டிங்:

3 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் மலான் அரைசதம்.


ஜோ ரூட், டேவிட் மலான் இணைந்தனர். உணவு இடைவேளைக்கு முன்பு இங்கிலாந்து 100 ரன்கள் முன்னிலை பெற்றது, இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பந்து வீச்சை அனாயசமாகக் கையாண்ட ஜோ ரூட் பிரமாதமான ட்ரைவ்களை ஆடி 57 பந்துகளில் அரைசதம் கண்டார். டேவிட் மலான் ஆஃப் சைடில் பிரமாதமாக ஆடி 99 பந்துகளில் அரைசதம் கண்டார். தேநீர் இடைவேளைக்கு முன் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ரீச் செய்தனர். புதிய பந்து எடுத்த பிறகு இந்தியப் பந்து வீச்சுக்கு மேலும் பித்துப் பிடித்தது குறிப்பாக இஷாந்த் சர்மா நம்பிக்கையின்றி வீசினார், வேகமும் இல்லை லெந்தும் இல்லை, லைனும் இல்லை.

ஆனால் மலான் சதம் எடுத்திருக்க வேண்டியது, சிராஜ் பந்து ஒன்று லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்ல எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது, ரிவியூவில்தான் அவுட் என்று தெரிந்தது, இந்தியாவுக்கு அதிர்ஷ்டகரமான அவுட் அது. ரூட், மலான் 139 ரன்கள் சேர்த்தனர். ரூட் 12வது பவுண்டரியில் 124 ரன்களில் சதம் கண்டார். ஹாட்ரிக் சதம்.



ஜானி பேர்ஸ்டொ (29), ஜடேஜாவை சிக்ஸ் அடித்தார். ரூட்டுடன் 51 ரன்கள் கூட்டணி அமைத்து ஷமியின் பந்தில் வெளியேறினார், பட்லரை ஷார்ட் மிட்விக்கெட்டில் நிறுத்தி வைத்து வீழ்த்தினார் ஷமி. ரூட் ஜடேஜாவை ரிவர்ஸ் ஸ்வீப், பெடல் ஸ்வீப் என்று ஆடினாலும் அவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட கால் நகர்த்த முடியாமல் பும்ரா இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். சாம் கரன் 15 ரன்னில் பவுன்சர் பந்தில் அவுட் சிராஜிடம் அவுட் ஆனார். இங்கிலாந்து 423/8.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பும்ரா தவிர அனைத்து பவுலர்களும் பந்து வீச்சில் சதமெடுக்கும் நிலையில் உள்ளனர். இங்கிலாந்து 423/8.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: