India vs England| 78 ஆல்அவுட் எனினும் இந்தியா வெற்றி பெற முடியும்- எப்படி?

லார்ட்ஸ் த்ரில் வெற்றி போல் இங்கும் வாய்ப்புள்ளது.

கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்று கூறப்படுவதுண்டு, இந்தியா ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நேற்ரு 78 ரன்களுக்குச் சுருண்டாலும் இங்கிலாந்து அபாரமாகத் தொடங்கி 120/0 என்று 42 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியாவுக்கு அனைத்தும் முடிந்து விடவில்லை.

  • Share this:
    கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்று கூறப்படுவதுண்டு, இந்தியா ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நேற்று 78 ரன்களுக்குச் சுருண்டாலும் இங்கிலாந்து அபாரமாகத் தொடங்கி 120/0 என்று 42 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட்டில் அனைத்தும் முடிந்து விடவில்லை.

    எப்படி எனில் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியில் ரூட் தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை, இந்தியப் பந்து வீச்சும் முதல் முறையாக நேற்று சோதனைகளைச் சந்தித்தது. ஆனால் இருஅணிகளுமே பேட்டிங் பலவீனங்கள் கொண்டவை.

    ஆனால் ட்ரெண்ட் பிரிட்ஜ் பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்? 3வது, 4வது இன்னிங்ஸ்களில் பிட்ச் பேட்டிங் சொர்க்கபுரியாகி விடும். எனவே இந்தியா முதலில் இன்று என்ன செய்ய வேண்டுமெனில் 120/0 என்ற இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை 150 ரன்களுக்குள் வெளியேற்ற வேண்டும் பந்து வீச்சு கடந்த டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் போல் இன்னும் வேகம் கூடுதலுடன் இருக்க வேண்டும், களவியூகம் முழுதும் அட்டாக்கிங் ஆக இருக்க வேண்டும்.

    பிரஷர், பிரஷர், பிரஷர் இதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். டேவிட் மலான் நீண்ட காலத்துக்குப் பிறகு டெஸ்ட் பிரதேசத்துக்குள் நுழைகிறார் அவரை 10 ரன்களுக்குள் எடுத்து விட வேண்டும், ஜோ ரூட்டை செட்டில் ஆக விடாமல் 30-40 ரன்களுக்குள் வீழ்த்தி விட வேண்டும், 200/4 என்று ஆன பிறகு 270 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்ட முடிந்தால் முன்னிலை 192 ரன்களாக இருக்கும், இந்த முன்னிலையும் பயங்கரமானதே,

    ஏனெனில் 78 ரன்களுக்கு சுருண்ட நினைவுகள் அப்படியே பசுமையாக மனதில் இருக்கும் அதையெல்லாம் துடைத்து எறிந்து விட்டு ஓவலில் கவாஸ்கர் ஒருமுறை 221 அடித்தாரே அதை மானசீகமாக நினைத்துக் கொள்ள வேண்டும், அல்லது ராகுல் திராவிட் லஷ்மண் கொல்கத்தாவில் பாலோ ஆனை வெற்றியாக மாற்றினார்களே அதை நினைவில் கொள்ள வேண்டும். அல்லது ஆஷசில் இங்கிலாந்து 67 ஆல் அவுட் ஆகி பிறகு டெஸ்ட்டையே வென்றனரே அதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்திய அணி மெதுவாக தொடங்கி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்த வேண்டும், ராகுல், ரோகித் சர்மா இருவரில் ஒருவர் பெரிய சதம் எடுக்க வேண்டும்.

    அப்படி ஒருவர் சதம் எடுத்தால் 192 ரன்கள் முன்னிலையை இந்தியா கடக்கும் போது 2 விக்கெட்டுகளைத்தான் இந்தியா இழந்திருக்கிறது என்றால், கோலி நிச்சயம் ஆடித்தான் ஆகவேண்டும், கோலி, புஜாரா, ரகானே, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து குறைந்தது 180-200 ரன்களைச் சேர்க்க வேண்டும். இந்தியா 2வது இன்னிங்சில் 380-390 ரன்களை எடுத்தால் 4வது இன்னிங்சில் 190-200 ரன்களை இங்கிலாந்து எடுக்குமாறு வந்தால் லார்ட்சில் நடந்தது இங்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

    இன்று இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்க வேண்டும், அப்படியில்லாமல் இன்று முழுதும் இங்கிலாந்து ஆடிவிட்டால் மேலும் குறைந்தது 250 ரன்களை எடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 370 ரன்களை எடுத்து விட்டால் இந்தியா அவ்வளவுதான் பிறகு ட்ராவுக்காக ஆட வேண்டி வரும், அது பிரஷர் சிச்சுவேஷனில் மிக மிகக் கடினம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இன்று பவுலிங் இங்கிலாந்தின் கொலாப்சை உறுதி செய்தால் இந்தியாவுக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் அனைத்தும் முடிந்துவிடவில்லை, வெற்றி வாய்ப்பு உண்டு. இதற்கான தன்னம்பிக்கையும் ஆக்ரோஷமும் இந்திய அணியிடம் இருக்கவே செய்கிறது.
    Published by:Muthukumar
    First published: