• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs England 3rd test| முக்கியமானவர்களை மட்டும்தான் விமர்சிக்கின்றனர்: அஜிங்கிய ரகானே

India vs England 3rd test| முக்கியமானவர்களை மட்டும்தான் விமர்சிக்கின்றனர்: அஜிங்கிய ரகானே

ரகானே-புஜாரா சதக்கூட்டணி.

ரகானே-புஜாரா சதக்கூட்டணி.

சீரற்ற முறையில் ஆடிவரும் புஜாரா, ரகானே, கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, இதில் புஜாரா மற்றும் தன் மீதான விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை என்று ரகானே தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சீரற்ற முறையில் ஆடிவரும் புஜாரா, ரகானே, கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, இதில் புஜாரா மற்றும் தன் மீதான விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை என்று ரகானே தெரிவித்துள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரகானேயின் 61, புஜாராவின் 45 மிக முக்கியமான பங்களிப்பாக அமைந்தது, ஆனால் மேட்சை வென்றதால் இது பெரிய பங்களிப்பாக பார்க்கப்படுகிறது, தோற்றிருந்தாலோ, ஆட்டம் ட்ரா ஆனாலோ இந்த இன்னிங்ஸ்கள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும்.

    இந்நிலையில் நாளை 3வது டெஸ்ட் போட்டி ஹெடிங்லேயில் தொடங்குவதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அஜிங்கிய ரகானே, “மக்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் எப்போதும் முக்கியமானவர்கள் பற்றியே பேசுவார்கள் என்பதை நான் நம்புகிறேன். அது பற்றி எனக்கு அதிகக் கவலையில்லை.

    அணிக்கு என்ன பங்களிப்பு செய்கிறோம் என்பதைத்தான் பார்க்கிறேன், நானும் புஜாராவும் நீண்ட காலம் ஆடி வருகிறோம். சில சூழ்நிலைகளில் அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

    Also Read: India vs England| பட்டது போதும், இனி இந்திய வீரர்களுடன் வாக்குவாதம் இல்லை- அரண்டு போன ஜோ ரூட்

    நாங்கள் விமர்சனம் பற்றி கவலைப்படுவதில்லை, அணிக்கு பங்களிப்பு செய்வதில் அணியின் வெற்றிதான் எங்களுக்கு முக்கியம். எங்களால் கட்டுப்படுத்த முடியாததை நாங்கள் சிந்திப்பதில்லை.

    நாட்டுக்காக ஆடுவது உட்பட அனைத்துமே எனக்கு தூண்டுகோல்தான். நான் விமர்ச னங்களுக்கு கவலைப்படுவதில்லை. எது நம் கட்டுக்குள் இருக்கிறதோ அதில்தான் கவனம் செலுத்த முடியும். அணியின் ஆட்டமே உடனடியான இலக்கு.

    லார்ட்ஸில் என் இன்னிங்ஸ் உண்மையில் எனக்குத் திருப்தி அளிக்கிறது. நான் அணிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன், அதனால் பங்களிப்பு என்றே யோசிப்பேன். லார்ட்ஸ் 61 எனக்கு திருப்தி அளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புஜாரா மெதுவாக ஆடுகிறார் என்று நாம் எப்போதும் கூறி வருகிறோம், ஆனால் அவர் ஆடிய இன்னிங்ஸ் முக்கியமானது. 200 பந்துகள் ஆடியிருக்கிறார். 2வது இன்னிங்சில் 170-80 ரன்கள் இருந்தால் இங்கிலாந்துக்கு கடினம் என்று தெரிந்துதான் அப்படி ஆடினோம்.” என்றார் ரகானே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: