• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டாடா, பைபை, சீரியோ விராட்: விரக்தி விராட் கோலியைக் கேலி செய்த பாமி ஆர்மி

டாடா, பைபை, சீரியோ விராட்: விரக்தி விராட் கோலியைக் கேலி செய்த பாமி ஆர்மி

கோலி ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் காட்சி.

கோலி ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் காட்சி.

பாமி ஆர்மி என்ற இங்கிலாந்து ரசிகர்கள் குழு நேற்று ஹெடிங்லேயில் இந்திய கேப்டன் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடையைக் கட்டிய போது டாடா, பைபை, சீரியோ என்று சைகை செய்து கேலியுடன் வழியனுப்பி வைத்தனர்.

  • Share this:
    இசையுடன் கூடிய இந்த வழியனுப்பு அரங்கேற்றம் இந்திய ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இங்கிலாந்தின் உயர்தர ஸ்விங் பவுலிங்குக்கு இந்தியா 50 ஓவர்கள் தாங்க முடியாமல் 40.4 ஓவர்களில் 78 ரன்களுக்குச் சுருண்டது. ஆண்டர்சன் டாப் ஆர்டரைக் காலி, செய்ய ஆலி ராபின்சன், சாம் கரன், கிரெய்க் ஓவர்டன் ஆகியோர் மொத்த அணியையும் காலி செய்தனர். ஆட்ட முடிவில் இங்கிலாந்து 120/0 என்று வலுவாக உள்ளது.

    முதலில் 21/3 என்று ஆண்டர்சனால் குறுக்கப்பட்ட இந்திய அணியின் டெய்ல் எண்டர்களை 6 பந்துகளில் 4 விக்கெட் என்று பந்தாடியது இங்கிலாந்து. ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் ஒருமுறை கோலியின் மட்டை விளிம்பைச் சரியாகக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அனுப்பினார், 23 மேட்ச்களில் 7 வது முறையாக கோலியை ஆண்டர்சன் காலி செய்தார்.

    இது அவரது 629வது விக்கெட்டாகும். விராட் கோலி விரக்தியில் மெல்ல பெவிலியன் நோக்கி தலையைக் குனிந்தவாறே நடைபோட்டார். அவர் பெவிலியன் நோக்கி நடைபோடும்போது பாமி ஆர்மி ரசிகர்கள் குழாம் ‘சீரியோ, சீரியோ’ என்று இசைநடனத்துடன் கையை ஆட்டி கேலியுடன் வழியனுப்பினர்.



    ஆண்டர்சன் வீசிய பந்தை மிட் ஆஃபில் ஆட நினைத்தார் கோலி, ஆனால் பந்து லேட் அவுட்ஸ்விங் ஆக எட்ஜ் ஆனது, அது ஒரு கபில்தேவ் டெலிவரியாகும். கோலி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    கடந்த போட்டியில் ஆண்டர்சன் பிட்சை சேதம் செய்ததாக ஒரு சந்தர்ப்பத்தில் கோலி தப்பும் தவறுமாக எடைப்போட்டு அவரை வம்புக்கு இழுத்தார், அப்போது கோலி ஆண்டர்சனைப் பார்த்து இது ஒன்றும் உங்கள் வீட்டு கொல்லைப்புற கிரிக்கெட் அல்ல என்றார், இதற்கு ஆண்டர்சன் ஏதோ பதில் கூற, கோலி அதற்கு எப்போதும் சிணுங்கல்தான், இதுதான் உங்கள் வயது உங்களை மாற்றியுள்ள விதம் என்று கோலி பதிலடி கொடுத்தார்.

    இந்த உரையாடலுக்குப் பிறகுதான் பவுன்சர் மழை, மீண்டும் அவர்கள் பவுன்சர் மழை கடைசியில் இங்கிலாந்தின் தோல்வியில் முடிந்தது. இதற்குப் பழி தீர்க்கும் படலமாக ஆண்டர்சன் கோலியை காலி செய்தார்.

    உண்மையில் கோலி, ஆண்டர்சனுக்கு தன் மட்டை மூலம்தான் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர மெகா சீரியல் பெண் வில்லிகள் போல் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருந்தால் சரிவராது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: