லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை சீண்டி விட்டு மொத்த இங்கிலாந்து அணியையுமே சீண்டி திசைத்திருப்பி இந்திய அணி பிரமாத பவுலிங்கிலும் பவுலர்களிம் பேட்டிங்கிலும் அபார வெற்றிய ஈட்டியது.
இந்தப் போட்டியில் இந்திய டெய்ல் எண்டர்களான பும்ரா, ஷமியிடையே இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர், ஆண்டர்சன், கோலி இடையே வாக்குவாதம் முளைத்தது, இதில் இங்கிலாந்து அணியின் கவனம் சிதறியது, இதனையடுத்து இனி இந்திய வீரர்களுடன் களத்தில் வாக்குவாதம் இல்லை, பாடம் கற்று கொண்டோம் என்றார் ஜோ ரூட்.
கிரிக்கெட்டில் மைண்ட் கேம் என்பதை பெரிய அளவில் பயன்படுத்துபவர்கள் ஆஸ்திரேலியர்கள், ஆனால் திறமைக்கு ஒரு அனுபந்தம் போல் துணக்கருவி போல்தான் இது இருக்க முடியுமே தவிர கிரிக்கெட்டே மைண்ட் கேம்தான் என்று நம்புவது தவறு.
இந்நிலையில் ரகானே கூறியதாவது:
எங்களுக்கு அப்படியெல்லாம் எந்த சிந்தனையும் இல்லை, இங்கிலாந்தை மனரீதியாக ஒருங்கு குலைத்து ஆடுவதிலெல்லாம் ஆர்வமில்லை. எங்களுக்கு நல்ல கிரிக்கெட்டை ஆடுவதில்தான் விருப்பம். அந்தக் கணத்தில் கவனம் செலுத்தி அந்த ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவதாகும், என்றார் ரகானே.
Also Read: India vs England| பட்டது போதும், இனி இந்திய வீரர்களுடன் வாக்குவாதம் இல்லை- அரண்டு போன ஜோ ரூட்
நாளை 3ம் டெஸ்ட் நடைபெறும் ஹெடிங்லீ மைதானத்தில் இப்போது ஆடும் எந்த வீரர்களுக்கும் பரிச்சயம் இல்லை. ஆனால் இது கவலையளிக்கக் கூடியதல்ல என்று கூறும் ரகானே, “இங்கிலாந்தில் எங்கு ஆடுகிறோம் என்பதை விட நம் பவுலர்களின் லைன் மற்றும் லெந்த் தான் முக்கியமானது. இது பவுலிங் யூனிட்டாக சவால் அளிக்கக் கூடியது.
2014-ல் வந்த போது இளம் வீரர்களாக இருந்தோம். இன்னும் கற்றுக் கொண்டு வருகிறோம், இப்போது நாங்கள் அனுபவசாலிகள்.
எங்கள் பவுலர்கள் உலகம் முழுதும் எங்கும் வீசி அனுபவம் பெற்றுள்ளார்கள் எனவே ஒரு சூழ்நிலையில் எப்படி வீசுவது என்பது அவர்களுக்கு இப்போது கைவந்த கலை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டெய்ல் எண்டர்கள் பங்களிப்பு செய்வது முன் வரிசை பேட்ஸ்மென்களின் அழுத்தத்தை குறைக்கிறது. பேட்டிங்கிலும் அவர்கள் பங்களிப்பு செய்வது முக்கியம் என்று அவர்கள் கருதுவது நல்ல அறிகுறி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.