இங்கிலாந்து 432 ஆல் அவுட்: 354 ரன்கள் முன்னிலை- இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?

ஷமி

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 • Share this:
  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  இதன் மூலம் இந்திய அணியைக் காட்டிலும் 354 ரன்கள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறது, இது ஒரு பெரிய லீட். இந்திய அணி 3வது இன்னிங்சில் 350 ரன்களை எத்தனை முறை எடுத்திருக்கிறது என்பதைப் பார்க்க புள்ளி விவரங்களை அலச வேண்டும்.

  இன்று மழை வரலாம் என்று தெரிகிறது, இப்படி வருண பகவான் இந்திய அணியை காப்பாற்றினால்தான் உண்டு. இல்லையெனில் கஷ்டப்பட்டு பெற்ற 1-0 என்ற முன்னிலை 1-1 என்று ஆவதை தவிர்க்க முடியாது.

  இன்று வந்தவுடன் ஓவர்டன், ஷமியின் ஒரு பந்தை பாயிண்ட் பவுண்டரிக்கும் பிறகு மிட்விக்கெட்டில் இன்னொரு பவுண்டரியும் விரட்டினார்.

  ஆனால் ஷமியிடம் அவர் இன்ஸ்விங்கரில் எல்.பி.டபிள்யூ ஆனார். 42 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷமி தன் 4வது விக்கெட்டைக் கைப்பற்றினார். டஃப் கண்டிஷன்களில் விக்கெட் எடுக்கும் ஒரே பவுலர்.

  ஆண்டர்சன் பலத்த சப்த அலைகளுக்கு இடையே இறங்கினார், ஷமி அவருக்கு பவுன்சர் வீசவில்லை ஃபுல் லெந்த் பந்தைத்தான் வீசினார்.

  அடுத்த ஓவரில் விராட் கோலி, பும்ராவை பந்து வீச அழைத்தார், ஆலி ராபின்சன் ஒதுங்கிக் கொண்டு பேட்டை விட்டார் அப்படியே குச்சியையும் விட்டார். ஜிம்மி ஆண்டர்சன் இந்த முறை காதுகள் வழியாக உஸ் உஸ் என்று செல்லும் பவுன்சர்களை எதிர்கொள்வதிலிருந்து தப்பினார்.

  இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டுகள் பும்ரா 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட் சிராஜ் 2 விக்கெட்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இபோது இந்திய பேட்ஸ்மென்களுக்கு மேகமூட்ட வானிலையில் ஆட்டம் காட்டுவார், இந்திய பேட்ஸ்மென்களின் நடனங்களைப் பார்க்கப் போகிறோமா அல்லது ஆண்டர்சனை அடித்து ஆடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்று இன்னும் குறைந்தது 82 ஓவர்களையாவது இந்திய அணி சந்திக்க வேண்டும்.

  விரைவில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள்.
  Published by:Muthukumar
  First published: