Home /News /sports /

இதுதான் பேட்டிங்! சரவெடி சூரியகுமாரின் அசாத்திய சதம் - வெற்றியில் முடியாமல் போன வேதனை

இதுதான் பேட்டிங்! சரவெடி சூரியகுமாரின் அசாத்திய சதம் - வெற்றியில் முடியாமல் போன வேதனை

அட்டகாசமான சதம் வெற்றியில் முடியவில்லையே?- சூரியகுமார் யாதவ்

அட்டகாசமான சதம் வெற்றியில் முடியவில்லையே?- சூரியகுமார் யாதவ்

டி20 கிரிக்கெட்டின் தாத்பர்யம் இதுதான் என்று பேட்டிங்கில் இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்தார் சூரியகுமார் யாதவ்,14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 55 பந்தில் 117 எடுத்த சூரியகுமார் யாதவ் சதம் வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தது. ஆனால் இதுவரை இந்தியர்கள் எடுத்த டி20 சதங்களிலேயே மிகப்பிரமாதமான டி20 சதம் என்றால் அது சூரியகுமார் யாதவ் எடுத்ததுதான்,

மேலும் படிக்கவும் ...
    டி20 கிரிக்கெட்டின் தாத்பர்யம் இதுதான் என்று பேட்டிங்கில் இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்தார் சூரியகுமார் யாதவ்,14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 55 பந்தில் 117 எடுத்த சூரியகுமார் யாதவ் சதம் வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தது. ஆனால் இதுவரை இந்தியர்கள் எடுத்த டி20 சதங்களிலேயே மிகப்பிரமாதமான டி20 சதம் என்றால் அது சூரியகுமார் யாதவ் எடுத்ததுதான், ஏனெனில் இங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கான 216-ஐ விரட்டும்போது இங்கிலாந்து வயிற்றில் மோட்டார் ஓடச் செய்த அசாத்தியமான, நம்ப முடியாத சதமாக இது அமைந்தது. இந்தியா 198/9 என்று முடிந்தது.

    இந்தியா 120 பந்துகளில் 198/9 ஆனால் இந்த 120 பந்துகளில் சூரியகுமார் யாதவ் ஆடிய 55 பந்துகளில் 14 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 117 ரன்கள், சூப்பர் ஸ்டார்கள் உட்பட மீதி அனைவரும் சேர்ந்து எடுத்த ரன் எண்ணிக்கை 81. ஒருவேளை ஷ்ரேயஸ் அய்யருக்குப் பதில் தீபக் ஹூடாவை அணியில் தேர்வு செய்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்றே தோன்றுகிறது. உலகக்கோப்பைக்கு அணியைத் தயார் செய்கிறோம் பேர் வழி என்று தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்ற ரோஹித் சர்மா கடைசியில் தோல்விக்கு இட்டுச் சென்றார், அந்தந்த போட்டிகளை முதலில் வென்றால்தான் உலகக்கோப்பையின் போது தன்னம்பிக்கை பிறக்கும். இதே கோலி ஆட்களை மாற்றிக்கொண்டே இருந்தால் திட்டும் உலகம் அதையே ரோஹித் சர்மா செய்தால் வாய்மூடி மவுனியாகி விடுகிறது.

    இந்திய அணியின் டாப் 7 பேட்டர்கள் 57 பந்துகளில் 64 ரன்களைத்தான் எடுக்க சூரியகுமார் யாதவ் மட்டும் 55 பந்துகளில் 117 ரன்கள் என்றால் அவர் மற்ற டாப் பேட்டர்கள், இந்திய சூப்பர் ஸ்டார்கள் உட்பட பாடம் நடத்தியுள்ளார் என்றே அர்த்தம்.சூரியகுமார் அடித்த அடியில் 9 பந்துகளில் 25 ரன்கள் என்று சமன்பாடு மாறியது. ஆனால் 19வது ஓவரின் 5வது பந்தில் இந்த இன்னிங்சில் முதன் முதலாக சூரியகுமார் யாதவ் ஷாட் ஒன்று தோல்வி அடைந்து கையில் போய் கேட்ச் ஆனது. இதனால் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் இது ஒரு கோலி ரக மகாவிரட்டல் என்றே கூற வேண்டும்.



    அதோடு ஆஃப் திசையில் பாயிண்ட், கவர் பாயிண்ட், ஸ்கொயர் தேர்ட் மேன் ஆளில்லா பகுதிகளில் சூரிய குமார் விளாசிய சிக்சர்கள், பவுண்டரிகளையும் அதே போல் லெக் திசையில் பைன்லெக், டீப் ஸ்கொயர் லெக், லாங் லெக்கில் அடித்த சிக்சர்கள், நேர் சிக்சர்கள், பவுண்டரிகளும் இடைவெளியில் அடிக்கும் அவரது அபார களவியூக ஞாபக சக்தி மீது நமக்கு பிரமிப்பூட்டுவதாக அமைந்தது.

    இந்திய அணியில் இங்கிலாந்தின் பகைவர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார், செஹல் ஆகியோர் இல்லை, இப்படி ஒட்டுமொத்தமாக மாற்றம் கூடாது, புவனேஷ்வர் குமார் இல்லையெனில் அர்ஷ்திப் சிங்குக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும், உம்ரன் மாலிக் செம சாத்து வாங்கினார், அவரது வேகத்துக்கு ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் பிட்ச் செய்து பேட்டர்களின் உடலுக்கு நேராக குத்தி எழுப்பினால் ஆட முடியாது, அது எவ்வளவு பெரிய கொம்பு பேர்ஸ்டோவாக இருந்தாலும் சரி. ஆனால் அவர் ஃபுல் லெந்த்திலும் ஒரேயடியான ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிக ரூம் கொடுக்குமாறு வீசி 4 ஓவர்களில் 56 ரன்கள், ஆவேஷ் கான் முதல் 2 ஓவர்களில் 6 ரன்கள், ஆனால் அடுத்த 2 ஓவர்களில் 37 ரன்கள். ஜடேஜாவுக்கு சாத்துப்படி நடந்து 4 ஒவர் 45 ரன்கள். தேறிய பவுலர்கள் ஹர்ஷல் படேல் 4 -35-2, ரவி பிஷ்னாய் 30 ரன் 2 விக்கெட்.

    இங்கிலாந்து அணியில் மலான் 39 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 77 ரன்கள். லியாம் லிவிங்ஸ்டன் 29 பந்துகளில் 4 சிச்கர்களுடன் 42. ஹாரி புரூக் கடைசியில் இறங்கி 9 பந்தில் 19 ரன்கள். கிறிஸ் ஜோர்டான் 3 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 11 ரன்கள், கடைசி ஓவரில் உம்ரன் மாலிக் 17 ரன்கள் விளாசப்பட்டார். கடைசி 21 பந்துகளில் இங்கிலாந்து 47 ரன்களை விளாசித்தள்ளி 215க்கு வந்தது.

    இந்திய அணியில் ரோஹித் சர்மா ஒரு கையில் பவுண்டரி அடித்து 11 ரன்களில் டாப்லியின் அட்டகாச ஸ்லோ பந்துக்கு இரையானார், ரிஷப் பண்ட்டுக்கு இன்னும் டி20 வடிவம் பிடிபடவில்லை 1 ரன்னில் அவுட். விராட் கோலி புதிய அணுகுமுறையாக இறங்கி வந்து ஒரு அட்டகாச மிட்விக்கெட் பவுண்டரியையும் பிறகு அதைவிடவும் அட்டகாசமான கண்ணில் ஒத்திக் கொள்ளும் நேர் சிக்சர் ஒன்றையும் விளாசினார். ஆனால் அதே டேவிட் வில்லே ஓவரில் 3வது பவுண்டரியை கவருக்கு மேல் தூக்கி அடிக்கபோய் ஷார்ட் கவரில் சிக்கி 11 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் அய்யர் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார். இவரும் சூரியகுமாரும் இணைந்து 119 ரன்களை 10 ஒவர்களில் எடுத்தாலும் இதில் பெரும்பங்கு சூரியகுமார் யாதவ்வின் அதிரடியே பிரதானமாக இருந்தது. தினேஷ் கார்த்திக், ஜடேஜா, ஹர்ஷல் படேல் எல்லோரும் ஒற்றை இலக்கத்தில் காலி.

    இங்கிலாந்தின் ரீசி டாப்லி இந்த அதிரடியிலும் 4 ஓவர் 22 ரன் 3 விக்கெட். இவர்தான் ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார், இந்தியா 2-1 என்று டி20 தொடரை வென்றது. ஒருவேளை 2வது போட்டியில் பட்லர் டாஸ் வென்று முதலில் பேட் செய்திருந்தால் இந்தியா தொடரை இழந்திருக்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, T20

    அடுத்த செய்தி