முகப்பு /செய்தி /விளையாட்டு / Bumrah: பூம் பூம் பும்ரா- யுவராஜ் ஆன பும்ரா- சிஎஸ்கே ட்வீட்; அதே பிராட், அதே விளாசல் - சில ட்வீட்கள்

Bumrah: பூம் பூம் பும்ரா- யுவராஜ் ஆன பும்ரா- சிஎஸ்கே ட்வீட்; அதே பிராட், அதே விளாசல் - சில ட்வீட்கள்

பும்ரா சாதனை ட்வீட் புகழாரங்கள்

பும்ரா சாதனை ட்வீட் புகழாரங்கள்

ஒரே ஓவரில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 35 ரன்களுடன் பும்ரா முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார், எட்ஜ் பாஸ்டனில் இப்படியொரு திருப்புமுனைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஜடேஜா, ரிஷப் பண்ட் கடைசியில் பிராட் கைங்கரியத்தில் ஜஸ்பிரித் பும்ரா.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஒரே ஓவரில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 35 ரன்களுடன் பும்ரா முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார், எட்ஜ் பாஸ்டனில் இப்படியொரு திருப்புமுனைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஜடேஜா, ரிஷப் பண்ட் கடைசியில் பிராட் கைங்கரியத்தில் ஜஸ்பிரித் பும்ரா.

2007 டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கை சீண்டினார்கள் பிராடும், பிளிண்டாஃபும் விளைவு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் உலக சாதனை! இன்று 15 ஆண்டுகள் கழித்து ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அச்சுறுத்த முயன்றார் அதே ஸ்டூவர்ட் பிராட், காலம் மாறலாம் பேட்டரும் மாறலாம் ஆனால் இந்திய அணியை சீண்டினால் முடிவு என்னவோ ஒன்றுதான் அது விளாசல், அன்று யுவராஜ் 36, இன்று பும்ரா 35. இரண்டும் உலக சாதனை, பாவம் இரண்டுக்கும் காரணமானவர் ஸ்டூவர்ட் பிராட்.

இது குறித்து லாரா ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசியபோது பந்து வீசிய ஆர்.ஜே. பீட்டர்சன் தன் ட்விட்டரில், என் சாதனையை உடைந்து போனது வருத்தமாக இருக்கிறது என்று நக்கல் இமோஜி ஒன்றை பகிர்ந்துள்ளார்:

சென்னை சூப்பர் கிங்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “பும்ராவால் பிராட் யுவிஃபை செய்யப்பட்டார்” என்று நக்கலாகப் பதிவிட்டு புகழாரம் சூட்டியுள்ளது:

பும்ரா இந்த சாதனையை நிகழ்த்தியதோடு கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் வர பும்ரா 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 நாட் அவுட் இந்தியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் விளாசியது, மீண்டும் பந்து வீசிய போது இங்கிலாந்து இடது கை வீரர் அலெக்ஸ் லீஸின் ஸ்டம்பை பறக்க விட்டார் பும்ரா இங்கிலாந்து 16/1.

First published:

Tags: Brian lara, CSK, India Vs England, Jasprit bumrah, Memes, Twitter, World record