டாஸ் வென்று ‘வானம் பொழிகிறது பூமியில் விக்கெட்டுகள் விளைகிறது’ என்று கட்டபொம்மன் சிவாஜி ஸ்டைலில் ஏன் பேட்டிங் எடுக்கவில்லை என்று காரணம் கூறிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்தியாவின் ஆதிக்க பேட்டிங்கை எதிர்பார்க்கவில்லை.
மார்க் உட், சாம் கரன் சுத்தமாக அவரை ஏமாற்றினர்.
ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இணைந்து 126 ரன்கள் கூட்டணி அமைத்தனர். நல்ல உத்தி, தளர்வான பந்துகளுக்காக காத்திருந்து ஆடிய பொறுமை, பந்தை நன்றாக கணித்தல் ஆகிய சேர்க்கையில் பிரமாதமாக ஆடினர்.

ரோகித் சர்மா பிரமாதமான பேட்டிங்
ரோகித் சர்மா குறிப்பாக சாம் கரன் பந்து வீச்சை வெளுத்தார், ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார், அதே போல் மார்க் உட் 145 கிமீ வேகத்தில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட்டில் சிக்சருக்கு அனுப்பினார். 145 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து அபார சதம் நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா, கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஏமாந்தார். இருமுறை நெருக்கமாக அவுட் ஸ்விங்கரை வீசிய ஆண்டர்சன் அதே இடத்தில் ஆடிக்கொண்டே வந்த பந்தை பிட்ச் செய்ய உள்ளே புகுந்தது ரோகித் கால்காப்பில் பட்டு மட்டையில் பட்டு பவுல்டு ஆனது.
புஜாரா கதை அவ்வளவுதான் என்று தெரிகிறது. ஏனெனில் அவர் அடிக்கடி எட்ஜ் செய்ய தொடங்கி விட்டார், இந்த முறையும் 9 ரன்களில் மீண்டும் புஜாராவை வைடு ஆஃப் த கிரீசிலிருந்து வீசி அவுட்ஸ்விங்கரில் எட்ஜ் செய்ய வைக்க 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.
ரோகித் ஆட்டமிழந்தவுடன் 16 ரன்களுக்கு 100 பந்துகளை சந்தித்த ராகுல் புகுந்தார். 41வது ஓவரில்தான் ராகுல் முதல் பவுண்டரியை அடித்தார். அதுவும் மொயின் அலியை இறங்கி வந்து நேராக சிக்ஸ் விளாசி பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். அரைசதத்தையும் எடுத்தார் ராகுல்.

கோலி ஆட்டமிழந்து செல்கிறார்.
பேட்டிங் நன்றாக ஆட வானிலையும் ஒத்துழைத்தது கோலி பெரும்பாலும் கவனமாக ஆடி 3 பவுண்டரிகளை அடித்து 43 ரன்களை எடுத்தார், ராகுல்தான் பெரும்பாலும் பந்துகளைச் சந்தித்தார். மார்க் உட் பந்தை தேர்ட் மேன் திசைக்கு வெட்டி ஆடி பவுண்டரி அடித்த ராகுல் 212 பந்துகளில் சதம் கண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோலி ஒருமுறை ஆண்டர்சன் பந்தை எட்ஜ் செய்தார், ஆனால் அது ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது, கேட்ச் ஆகவில்லை, ஆனால் ஆலி ராபின்சன் கோலியை பேட்டை கொண்டு வரச் செய்தார், வைடு பந்தின் மீது மட்டையை கொண்டு சென்றார் எட்ஜ் ஆகி கேப்டன் ரூட் கேட்ச் எடுத்தார்.
ஆட்ட முடிவில் ராகுல் 127 நாட் அவுட், ரகானே 1 நாட் அவுட் இந்தியா 276/3.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.