India vs England | இராண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

India vs England | இராண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சேப்பாக்கம் மைதானம்

India vs England | இளம் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவே ஆங்காங்கே மூத்த ரசிகர்கள் பட்டாளமும் டிக்கெட்டை வாங்க போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.

  • Share this:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 13 ம் தேதி முதல் 17  வரை நடைபெற உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அண 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண  ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் இரண்டாவது போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  போட்டிக்காக டிக்கெட் கடந்த 8 ம் தேதி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு இன்று போட்டிக்கான டிக்கெட் நேரடியாக சேப்பாக்கத்தில் உள்ள கவுண்டரில் வழங்கப்பட்டது. போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தியாவில் கொரோனோ பரவலுக்கு பிறகு துளிர்விடும் விளையாட்டு உலகின் முதல் போட்டியாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2019க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி சென்னையில் மீண்டும் துளிர்விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பதால் இளம் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவே ஆங்காங்கே மூத்த ரசிகர்கள் பட்டாளமும் டிக்கெட்டை வாங்க போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். சேப்பாக்கத்தில் சச்சின், இம்ரான் கான் விளையாடிய டெஸ்ட் போட்டி நினைவுகளை  அசைபோட்டுக்கொண்டே மூத்த ரசிகர் ஒருவர் தன் மகன்களுடம் சேர்ந்து வரிசையில் காத்திருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது. ரசிகர்கள் ஆதரவுடன் இந்திய அணி வெற்றிக்கு தயாராகிறது இதற்கு முழு ஆதரவுடன் ரசிகர்கள் போட்டிக்கு தயாராகின்றனர்.

இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்களுடன் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் வெளி மாநிலங்களிலிருந்தும் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்திருந்தனர். இங்கிலாந்து அணியுடன் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க  இந்திய அணி வீரர்கள் காத்திருக்கின்றனர்.  கொரோனோ காலத்தில் முடங்கியிருந்த ரசிகர்களை  இந்த கிரிக்கெட் போட்டி கட்டவிழ்த்துள்ளது என்றே சொல்லலாம்.
Published by:Vijay R
First published: