ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அஸ்வினை நீக்க முடியும்போது கோலியையும் நீக்கலாம்- கபில் தேவ் காரசாரம்

அஸ்வினை நீக்க முடியும்போது கோலியையும் நீக்கலாம்- கபில் தேவ் காரசாரம்

கோலியை நீக்க கபில் தேவ் பரிந்துரை

கோலியை நீக்க கபில் தேவ் பரிந்துரை

450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் போன்ற திறமையான பவுலரை டெஸ்ட் அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும் என்றால் டி20 அணியிலிருந்து ஏன் கோலியை நீக்க முடியாது? விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்கலாமே என்று 1983 உலகக்கோப்பை வென்ற லெஜண்ட் கபில் தேவ் காரசாரமாகக் கேட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் போன்ற திறமையான பவுலரை டெஸ்ட் அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும் என்றால் டி20 அணியிலிருந்து ஏன் கோலியை நீக்க முடியாது? விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்கலாமே என்று 1983 உலகக்கோப்பை வென்ற லெஜண்ட் கபில் தேவ் காரசாரமாகக் கேட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 இன்று நடைபெறும் வேளையில் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர், அதனால் கோடாரி யார் மீது விழும் என்று தெரியவில்லை. இஷான் கிஷனைத் தூக்கி விட்டு தீபக் ஹூடாவை தொடக்கத்தில் இறக்கி கோலிக்கு இடம் கொடுக்கலாம், ஆனால் ரிஷப் பண்ட்டை எங்கு சொருக முடியும்? நிச்சயம் ஒன்று சூரியகுமார் யாதவ் இல்லையெனில் தினேஷ் கார்த்திக் தலையில் வந்து விடியும்.

இந்நிலையில் முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை பந்தாடி மிகச்சவுகரியமாக வென்ற நிலையில் இன்று வெற்றி பெற்றால் சீரியச் சீல் ஆகிவிடும் இப்போது கோலியை யாருக்குப் பதில் எடுப்பது என்பது பெரிய கேள்வியாக அணி நிர்வாகத்தின் முன் நிற்கையி கபில் தேவ் கூறுவது இதைத்தான், அஸ்வினையே நீக்க முடியும் போது ஏன் கோலியை நீக்கக் கூடாது என்பதுதான்.

“இப்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 அணியில் பெஞ்சில் அமர வேண்டியதுதான். உலக தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் அஸ்வினை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும்ம் எனில் விராட் கோலியை டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும்.

விராட் கோலி இப்போது அவரது பழைய ஆட்டத்தில், நாமெல்லோரும் கொண்டாடி மகிழ்ந்த அந்த பார்மில் இல்லை. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக் கூடாது.

நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள், ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். அவரவர்களுக்கு அவரவர் பார்வை உண்டு.

ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும். ஏகப்பட்ட வீரர்கள் இருக்கும் போது தற்போதைய பார்மின் அடிப்படையில்தான் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். செல்வாக்கின் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்யக் கூடாது, ஒருவர் பெரிய வீரர், நிறுவப்பட்ட வீரராக இருக்கலாம் அதற்காக 5 போட்டிகளில் அவர் ஒன்றுமே ஆடமாட்டார் ஆனால் தேர்வு செய்வோம் என்று கூறுவார்களா?” இவ்வாறு கபில் தேவ் காட்டமாக பேசியுள்ளார்.

First published:

Tags: India Vs England, T20, Virat Kohli