ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

புவனேஷ்வர் குமார் மீண்டும் அட்டகாச பவுலிங்- ஆட்ட நாயகன்.

புவனேஷ்வர் குமார் மீண்டும் அட்டகாச பவுலிங்- ஆட்ட நாயகன்.

பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் விளாச, கோலி உட்பட மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப, பிற்பாடு ரவீந்திர ஜடேஜாவின் பிரில்லியண்ட் பேட்டிங்கினால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 36 என்று ஆகி அதன் பிறகு தேறாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்தியா டி20 தொடரை வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடரை வென்றுள்ளது இந்தியா.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் விளாச, கோலி உட்பட மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப, பிற்பாடு ரவீந்திர ஜடேஜாவின் பிரில்லியண்ட் பேட்டிங்கினால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 36 என்று ஆகி அதன் பிறகு தேறாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்தியா டி20 தொடரை வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடரை வென்றுள்ளது இந்தியா.

2-0 - இந்தியா வெற்றி,  2022,  3-2 வெற்றி  2021-ல், 2-1 வெற்றி 2018-ல்  2-1 வெற்றி  2016/17-ல், ஆக 4 தொடர்களில் தொடர் வெற்றி.

இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன, ரிஷப் பண்ட், விராட் கோலி, ஜடேஜா, பும்ரா அணியில் வர துரதிர்ஷ்டசாலி தீபக்ஹூடா அநியாயமாக உட்கார வைக்கப்பட்டார். மீண்டும் ஜடேஜா வந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் 6 ஓவர்களில் 61 என்று இருந்த ஸ்கோர் 89/5 என்று ஆனது, விக்கெட்டுகளும் சரிய பவுண்டரி வறட்சியும் ஏற்பட்டது.

அதன் பிறகு 29 பந்துகளில் 5 அட்டகாசமான பவுண்டரிகளுடன் ஜடேஜா 46 ரன்களை எடுத்தார், முன்னதாக இந்தியா அதிரடி தொடக்கம் கண்டது. ரோஹித் சர்மாவும் ரிஷப் பண்ட்டும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 29 பந்துகளில் 49 ரன்களைச் சேர்த்தனர். ரோஹித் சர்மா டேவிட் வில்லேயை அதியற்புத சிக்சர் அடித்து 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு 34 வயதில் அறிமுகமான ரிச்சர்ட் கிளீசன் என்ற பவுலர் அசத்தினார். ரோஹித் சர்மாவை ஷார்ட் பிட்ச் பந்தில் சொதப்பல் ஹூக் ஷாட்டில் பட்லரிடம் கேட்ச் ஆகச் செய்து வெளியேற்றினார். பிறகு 7வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி அசிங்கமாக கிளீசன் பந்தை பார்க்காமலேயே ஒரு சுற்று சுற்றினார், பாயிண்டில் கொடியேற்றி மலானிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் வீழ்ந்தார். தீபக் ஹூடா நான் ஆடியிருக்கலாமே என்று நினைத்திருக்கக் கூடும்.

அடுத்த பந்தே கிராஸ் செய்த ரிஷப் பண்ட் அசிங்கமாக மேலேறி வந்து ஆட முற்பட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. டெபூவிலேயே 3 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குக் கைப்பற்றிய கிளீசன் கடைசியில் 15 ரன்களுக்கு 3 விக்கெட் என்று முடிந்தார்.

சூரியகுமார் யாதவ் (15), ஹர்திக் பாண்டியா (12) இருவரும் ஜோர்டானின் (4/27) ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இரையாகினர். சூரியகுமார் யாதவ் மூக்குக்கு மேல் ராஜாவாக ஹர்திக் பாண்டியா பாயிண்டில் பிடிபட்டார். தினேஷ் கார்த்திக் (12) எடுத்து 3வது ரன் ஓடப்போய் ரன் அவுட் ஆனார். அவர் 17 பந்தில் 12 ரன்கள்.  ஹர்ஷல் படேல் ஜோர்டான் ஒரு பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீச எம்பாமல் இடுப்புயரம் வந்தது சிக்ஸ் விளாசினார், ஆனால் அடுத்த பந்தே கொஞ்சம் கூடுதலாக எழும்ப கத்தி சீவினார் ஆனால் பந்து கேட்ச் ஆகிவிட்டது. ஜடேஜா அற்புதமாக ஆடி 29 பந்தில் 46 ரன்கள் விளாச இந்தியா 170/8 என்று முடிந்தது.

புவனேஷ்வர் குமார், பும்ரா, செஹல் அட்டகாச பவுலிங்:

இங்கிலாந்து சேசிங்கைத் தொடங்கிய போது இங்கிலாந்தின் பரமவைரியான புவனேஷ்வர் குமார் முதல் பந்திலேயே அவுட் ஸ்விங்கரில் ஜேசன் ராயை டக்கில் காலி செய்தார். பந்தை அவுட் ஸ்விங்கர் செய்ய அவர் அதை கட் ஆடினார், ஸ்லிப்பில் நேராக ரோஹித் கையில் போய் உட்கார்ந்தது. மெய்டன் விக்கெட்டுடன் தொடங்கினார் புவனேஷ்குமார்.

ஜாஸ் பட்லருக்கு பேட்டிங் மறந்து விட்டது போலும். 4 ரன்கள் எடுத்திருந்த போது அட்டகாசமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஸ்பின்னருக்கு நிற்பது போல் ஸ்டம்புக்கு அருகில் நின்றார், புவனேஷ்வர் வீசிய பந்து அவுட்ஸ்விங்கராக பட்லர் மட்டையில் லேசாக பட்டது, ரிஷப் பண்ட் அட்டகாசமாகப் பிடித்தார், முறையீடு எழ நடுவர் மறுத்தார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பானது, எட்ஜ் தெளிவாக தெரிந்தது. இது ஒரு அற்புதமான கேட்ச்.

பும்ரா

அதிரடி மன்னன் லியாம் லிவிங்ஸ்டன் இறங்கி முதல் பந்திலேயே நடந்து வந்து புவனேஷ்வர் குமாரை ஆன் திசையில் பவுண்டரி விளாசினார். மேலும்  2 பவுண்டரிகளை நடந்து வந்து அடித்து 9 பந்துகளில் 15 என்று அச்சுறுத்தினார், ஆனால் பும்ரா வந்தார் ஓடி வந்து ஆஃப் ஸ்பின் போல வீசினார் பேட் கால்காப்பு இடைவெளியில் புகுந்து பவுல்டு ஆனார் லியாம் லிவிங்ஸ்டன்.  இதுவும் ஒரு விக்கெட் மெய்டன் ஓவர்.

ஹாரி புரூக் (8), டேவிட் மலான் (19) ஆகியோரை செஹல் வீழ்த்தினார். சாம் கரன் 2 ரன்களில் பும்ரா பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார்.10.2 ஓவர்களில் 60/6 என்று இங்கிலாந்து தோல்வி முகம் கண்டது. மொயீன் அலி கடந்த போட்டி போல் வெளுத்துக் கட்டினார், ஜடேஜாவை ஒரு சிக்ஸ், பாண்டியாவை ஒரு சிக்ஸ் என்று 21பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தை தூக்கி அடிக்கப் போய் மிட் ஆஃபில் கேட்ச் ஆனார்.

உடனேயே கிறிஸ் ஜோர்டான் 1 ரன்னில் செஹல் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, 95/8 ஆனது. ஆனால் ஹர்திக் பாண்டியாவை அதே ஓவரில் டேவிட் வில்லே வைட் மிட் ஆனில் ஒரு பவுண்டரியும் பிறகு லெக் ஸ்டம்பில் மடத்தனமாக வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை சிக்சருக்கும் விரட்டினார், அந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் 17 ரன்களை கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.

அறிமுக வீரர் கிளீசன் புவனேஷ்வர் குமாரின் 3வது விக்கெட்டாக கோலியிடம் கேட்ச் ஆக 109/9 என்று டேவிட் வில்லே மட்டும் ஒருமுனையில் போராடி  22 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர் என்று 33 ரன்கள் எடுத்து  ஆக்ரோஷம் காட்டினார் அதுவும் ஹர்ஷல் படேலை பாயிண்டில் அடித்த சிக்ஸ், அதன் பிறகான பவுண்டரி கொஞ்சம் ரோஹித் படைக்கு திகிலூட்டியது 3 ஓவர் 50 ரன் தேவை.

ஒருவேளை ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைக்கையில் சிங்கிள் எடுத்து பார்கின்சனிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க ஹர்ஷல் படேல் அவரை பவுல்டு செய்தார். 121 ரன்களுக்குச் சுருண்டு இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் அட்டகாசம் 3/15, பும்ரா 3 ஓவர் 1 மெய்டன் 10/2. செஹல் 2 விக்கெட். பாண்டியா, ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்.

First published:

Tags: Bhuvneshwar Kumar, India Vs England, Ravindra jadeja, Rohit sharma