ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கோலி அபாரம்... ஹர்திக் மிரட்டல் - இங்கிலாந்து 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

கோலி அபாரம்... ஹர்திக் மிரட்டல் - இங்கிலாந்து 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

Ind vs Eng

Ind vs Eng

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில்  இங்கிலாந்து அணிக்கு 169  ரன்கள் இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

    அடிலெய்ட்டில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பிடித்துள்ளனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து கேப்டன் ரோகித் ஷர்மாவும் 28 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் மறுபடியும் ஏமாற்றம் அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    பொறுப்பாக விளையாடிய விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார்.39 பந்துகளில் அரைசதம் அடித்ததார். ஆனால் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.  மறுபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India Vs England, T20 World Cup