முகப்பு /செய்தி /விளையாட்டு / India vs England 2nd odi Lords-விராட் கோலி அணியில், இந்தியா டாஸ் வென்று பீல்டிங்

India vs England 2nd odi Lords-விராட் கோலி அணியில், இந்தியா டாஸ் வென்று பீல்டிங்

virat kohli

virat kohli

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லார்ட்சில் தொடங்கியது, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லார்ட்சில் தொடங்கியது, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதில் விராட் கோலி வந்துள்ளார். பிட்ச் பயங்கரமான பேட்டிங் பிட்ச் ஆக இருக்கும் போல் தெரிகிறது. இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.

மொகமட் ஷமி 151 ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்துள்ளார் இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகளைக்க் கடந்து விடுவார்.

பும்ரா 72 ஒருநாள் போட்டிகளில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அன்று 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அச்சுறுத்தலான பவுலராக திகழ்கிறார்.

இன்று உலகக்கோப்பையை இங்கிலாந்து 2019-ல் வென்ற நாள். இந்த தினத்தில் ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்ய விரும்பும், இந்திய அணி இந்தத் தினத்தில் இங்கிலாந்துக்கு ஒரு அடி கொடுத்து தொடரை வெல்ல விரும்பும். ஒரு நல்ல கிரிகெட் மேட்ச் காத்திருக்கிறது. இங்கிலாந்து 2 ஓவர்களில் 5/0, ஜேசன் ராய் 4 ரன்கள் பேர்ஸ்டோ இன்னும்ம் தன் கணக்கைத் தொடங்கவில்லை.

First published:

Tags: India Vs England, Shreyas Iyer, Virat Kohli