Home /News /sports /

மெக்கல்லம் வழி தனிவழி அல்ல... பிணி வழி - நிரூபிக்கும் இந்திய அணி

மெக்கல்லம் வழி தனிவழி அல்ல... பிணி வழி - நிரூபிக்கும் இந்திய அணி

பிரெண்டன் மெக்கல்லம் ‘பேஸ்பால்’ கைகொடுக்குமா?

பிரெண்டன் மெக்கல்லம் ‘பேஸ்பால்’ கைகொடுக்குமா?

மெக்கல்லம் வழி எங்கள் வழி என்று 4வது இன்னிங்ஸில் பெரிய இலக்குகளை அதிரடியாக விரட்டி நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆகச்சிறந்த விரட்டலுமாகிய 378 ரன்கள் விரட்டலையும் வைத்து ‘பேஸ்பால்’ என்று மெக்கல்லம் வழியை விதந்தோதி இனி இப்படித்தான் என்று ஆர்ப்பரித்தது இங்கிலாந்து, ஆனால் அந்த வழி ‘மெக்கல்லமின் தனி வழி அல்ல, அது பிணி வழி’ என்று முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோற்றதையடுத்து இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தை கேலி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  மெக்கல்லம் வழி எங்கள் வழி என்று 4வது இன்னிங்ஸில் பெரிய இலக்குகளை அதிரடியாக விரட்டி நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆகச்சிறந்த விரட்டலுமாகிய 378 ரன்கள் விரட்டலையும் வைத்து ‘பேஸ்பால்’ என்று மெக்கல்லம் வழியை விதந்தோதி இனி இப்படித்தான் என்று ஆர்ப்பரித்தது இங்கிலாந்து, ஆனால் அந்த வழி ‘மெக்கல்லமின் தனி வழி அல்ல, அது பிணி வழி’ என்று முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோற்றதையடுத்து இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தை கேலி செய்து வருகின்றனர்.

  முதலில் அட்டாக்கிங் என்பது ஏதோ மெக்கல்லமோ, இங்கிலாந்தோ கண்டுப்பிடிக்கவில்லை, கிரிக்கெட் தொடங்கிய காலம் முதல் அணிகளில் ஏதாவது ஒரு வீரர் இப்படியாகத்தான் ஆடுவார்கள். அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்காவின் பேரி ரிச்சர்ட்ஸ், ஷான் போலாக்கின் தாத்தா போலாக், டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், எவர்ட்டன் வீக்ஸ், ராய் பிரெடெரிக்ஸ், ஆல்வின் காளிச்சரண், விவ் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாய்ட், கார்டன் கிரீனிட்ஜ், கெய்ல், நம்மூரில் கபில் தேவ்,கிருஷ் ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டீல், சேவாக், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், இப்போது ரிஷப் பண்ட், ஏன் லஷ்மனே கூட அட்டாக்கிங் கிரிக்கெட்தான், ஆஸ்திரேலியாவின் கிரகாம் உட், ரிக் டார்லிங், கிரகாம் யாலப், முதல் மேத்யூ ஹெய்டன், ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இலங்கையின் ஜெயசூரியா, கலுவிதரனா, குருசிங்கா, தில்ஷன், ரணதுங்கா, அரவிந்த டி சில்வா போன்றோரும் அட்டாக்கிங் கிரிக்கெட் தான், அது எந்த வடிவமானாலும் சரி. இங்கிலாந்தில் ஒரே ஆள் போத்தம் மட்டுமே ஆடி வந்தார். அதனால் அவர்களுக்கு அவர் பொக்கிஷம்.

  ஏன் ஒருமுறை கவாஸ்கர் பேட் மால்கம் மார்ஷல் பந்தில் பறந்தது, அதற்கு அடுத்த டெல்லி போட்டியில் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக 95 பந்தில் சதம் எடுத்தார் என்றால் நம்ப முடியுமா!! ஆகவே பேஸ்பால் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து என்றே தோன்றுகிறது

  கன்சர்வேட்டிவ் இங்கிலாந்துக்கு இந்த வழிமுறை புதிது, ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாஹ், கேப்டன், பயிற்சியால்ர் புக்கானன் வழியும் இதுதான் அதுவரை எதிரணியினருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும் பிட்ச்களை அமைத்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாஹ் வந்த பிறகு முழுதும் பேட்டிங் பிட்ச் ஆகப் போட்டு எதிரணியினரை போட்டு சாத்தி எடுத்தனர், ஏனெனில் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் எந்தப் பிட்சிலும் எதிரணியினரை சுருட்டி 20 விக்கெட்டுகளை எடுக்கும் திறமை கொண்டவர்கள், அதனால் ஸ்டீவ் வாஹ் அதிரடி முறையைக் கையாண்டு 17 டெஸ்ட்போட்டிகளை தொடர்ச்சியாக வென்றார்.

  அதன் பிறகு என்னவாயிற்று, எம் வழி தனி வழி பிணி வழியாகத்தானே ஆனது. மெக்கல்லமே ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கி 54 பந்துகளில் சதம் கண்டு உலக சாதனை படைத்தார், ஆனால் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மரபான பேட்டிங் ஆடி 500க்கும் மேல் குவித்து நியூசிலாந்தை வீழ்த்தவில்லையா, ஆகவே இந்த வழி நிரந்தர வழியில்லை.

  அன்று எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியிலேயே நம் சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண் போன்ற வீரர்கள் இருந்திருந்தால் முதல் இன்னிங்ஸே இந்தியா 600 ரன்களை விளாசியிருக்கும் அப்புறம் எங்கே இங்கிலாந்து ஜெயிப்பது?

  இங்கிலாந்து அணி ஒன்றைப் புரிந்து கொண்டு விட்டனர், அவர்களது பவுலிங் சாதகமான கண்டிஷன்கள் பல நேரங்களில் வெளிநாட்டு அணிகளுக்குச் சாதகமாகி இங்கிலாந்து தோற்று விடுகிறது, அதனால் என்ன முடிவு கட்டிவிட்டார்கள் என்றால் பேட்டிங் பிட்சைப் போட்டு சாத்தி எடுப்பது, எதிரணியினரை நிலைகுலையச் செய்து மனோவியல் ரீதியாக சோர்வடையச் செய்து பிறகு பேட்டிங்கில் அவர்களை வீழ்த்தி விடுவது என்ற ஜான் புக்கானன் முறைக்கு இப்போதுதான் வந்துள்ளனர்.

  இவர்கள் இப்போது அட்டாக்கிங் இங்கிலாந்துதான் அதற்காக நாமொன்றும் நெதர்லாந்து இல்லையே என்று ரசிகர்கள் கேலி செய்வதில் அர்த்தமிருக்கிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Brendon McCullum, India Vs England

  அடுத்த செய்தி