• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs England | திராவிட் படையிலிருந்து கோலி படையுடன் இணையும் வீரர்கள்

India vs England | திராவிட் படையிலிருந்து கோலி படையுடன் இணையும் வீரர்கள்

சூரிய குமார் யாதவ்.

சூரிய குமார் யாதவ்.

சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்ததையடுத்து முதன் முறையாக இந்திய டெச்ட் அணியில் சூரிய குமார் யாதவ் இடம்பெறவிருக்கிறார், இவரும், பிரித்வி ஷா மற்றும் ஜெயந்த் யாதவ் இங்கிலாந்து தொடருக்காக அங்கு செல்வதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

  • Share this:
    சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்ததையடுத்து முதன் முறையாக இந்திய டெச்ட் அணியில் சூரிய குமார் யாதவ் இடம்பெறவிருக்கிறார், இவரும், பிரித்வி ஷா மற்றும் ஜெயந்த் யாதவ் இங்கிலாந்து தொடருக்காக அங்கு செல்வதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

    இங்கிலாந்து கவுண்டி செலக்ட் அணிக்கு ஆடிய வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்தனர். ஷுப்மன் கில் ஏற்கெனவே காயமடைந்துள்ளார்.

    இவர்களுக்கான மாற்று வீரர்களை இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகமும் ரவிசாஸ்திரி, விராட் கோலியும் கேட்டிருந்தனர். அதற்கு செவி சாய்த்த பிசிசிஐ, “ஆம்! பிரிதிவி ஷா, சூரியகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் இங்கிலாந்து செல்கின்றனர்.

    Also Read: Mirabai Chanu| ரியோ ஒலிம்பிக் தோல்விதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது: வெள்ளி மங்கை மீராபாய் சானு

    Also Read: Ind vs SL: ஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்ற இளம்படை- புகைப்பட தொகுப்பு


    இப்போதே செல்கின்றனரா அல்லது இலங்கைக்கு எதிரான டி20 தொடர் முடிந்த பிறகு செல்கின்றனரா என்பதை பரிசீலித்து வருகிறோம். ஆனால் இந்த மூன்று வீரர்கள் மாற்று வீரர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. 3 நாட்களில் இவர்கள் எப்போது இங்கிலாந்து செல்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படும்” என்று மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.

    கே.எல்.ராகுல் சதமெடுத்து தன்னை நிரூபிக்க மயங்க் அகர்வால் பார்ம் அவ்வளவு நன்றாக இல்லை இதனையடுத்து தொடக்கத்தில் ஆக்ரோஷமாக ஆட பிரிதிவி ஷாவை கேட்டிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் குவாரண்டைன் இருப்பதால் முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக இவர்கள் அணியுடன் இணைய முடியுமா என்பது தெரியவில்லை. ஜெயந்த் யாதவ் பேட்டிங்கும் பிரமாதமாக ஆடுவார் என்பதினால் அவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

    ஒருவேளை அஜிங்கிய ரகானே முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடியவில்லை எனில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: