தடையை நீக்கிய இங்கிலாந்து பிரதமர்: இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்டிற்கு குவியப்போகும் ரசிகர்கள்

ஜோ ரூட்-விராட் கோலி

ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அரங்கு நிறைய ரசிகர்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம்.

 • Share this:
  இங்கிலாந்து அணிக்குள்ளேயே கோவிட் ஊடுருவிய நிலையில் முற்றிலும் புதிய இங்கிலாந்து அணியை பாகிஸ்தானுக்காகத் தேர்வு செய்துள்ளனர், ஆனால் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு முழு அனுமதி அளித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

  இதையடுத்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அரங்கு நிறைய ரசிகர்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். அப்படியே விராட் கோலியின் அங்க சேஷ்டைகளையும் ரசிக்கலாம்.

  ஸ்கை ஸ்போர்ட் சேனலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளித்த பேட்டியில், “ விளையாட்டுப் போட்டிகள், உள்ளரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு கரோனா வைரஸை எவ்வாறு சமாளிப்பது என அனுபவம் வந்துவிட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆதலால், மக்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு, அவர்களே முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளரங்குகள், வெளியரங்குகளில் பார்வையாளர்கள் கூடுதவதற்குத் தடையில்லை. இரவு நேர கிளப்புகள் உள்ளிட்டவை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள், விழாக்களில் மக்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையும் விலக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

  கொரோனா காரணமாக இங்கிலாந்து, நியூஸிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கடந்த மாதம் குறைந்த அளவிலான பார்வையாளர்களுடனே நடத்தப்பட்டது.

  ஜூலை 14-ம் தேதி துர்ஹாம் நகரில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

  இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. ரசிகர்கள் சூழப் போட்டி நடத்துவது உற்சாகம்” எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: