முகப்பு /செய்தி /விளையாட்டு / India vs England| 3-வது டெஸ்ட்டில் மழை பெய்யுமா?- ஹெடிங்லீ பிட்ச் எப்படி?

India vs England| 3-வது டெஸ்ட்டில் மழை பெய்யுமா?- ஹெடிங்லீ பிட்ச் எப்படி?

ஹெடிங்லீ மைதானம்

ஹெடிங்லீ மைதானம்

இந்தியா-இங்கிலாந்து தொடரில் வானிலை ஒரு பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரேட் எஸ்கேப் ஆனது. ஆனால் லார்ட்சில் மழை வந்தாலும் இங்கிலாந்தை காப்பாற்ற முடியவில்லை, இந்நிலையில் ஹெடிங்லீயில் மழை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா-இங்கிலாந்து தொடரில் வானிலை ஒரு பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரேட் எஸ்கேப் ஆனது. ஆனால் லார்ட்சில் மழை வந்தாலும் இங்கிலாந்தை காப்பாற்ற முடியவில்லை, இந்நிலையில் ஹெடிங்லீயில் மழை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி பேட்டிங் வரிசையில் புஜாரா ஓரளவுக்கு ரன் எடுத்தார், ரகானே 61 ரன்களுடன் பார்முக்கு வந்தது போல்தான் தெரிகிறது, ரோகித் சர்மா ஹூக் ஷாட்டில் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும், கோலி ரன்கள் எடுத்தேயாக வேண்டும்.

இங்கிலாந்தில் ஜோ ரூட் தவிர மற்ற எல்லோரும் பார்முக்கு வந்தாக வேண்டும். எப்போதும் ஒரு அணி பலவீனமாக இருக்கும்போது உள்நாட்டு சாதகங்களுக்கு ஏற்ப பேட்டிங் பிட்சைப் போட்டு விட வேண்டும், நான் 400, நீ 500 மேட்ச் ட்ரா என்று ஒதுங்கி விட வேண்டும், அப்படி செய்தால் ஆஷஸ்தொடருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் பார்முக்கு வந்து தன்னம்பிக்கை பெறுவார்கள்.

இந்திய அணிக்கும் பேட்டிங் பிட்ச் என்றால் பிடிக்கும் வெளுத்து வாங்குவார்கள், ரசிகர்களுக்கும் இப்போதெல்லாம் தோற்காமல் இருந்தால் போதும் அறுவையான ட்ரா ஆனால் பரவாயில்லை, இதனால் பேட்டிங் ட்ராக் போட்டால் இங்கிலாந்துக்கும் நல்லது, கோலியும் ஒரு டெஸ்ட் ஜெயித்தாகிவிட்டது என்று ரிலாக்ஸாக பார்முக்கும் வந்து விடுவார்.

ஹெடிங்லி பிட்ச் எப்படி?

ஹெடிங்லீயில் பொதுவாக ஸ்விங் பவுலிங்குக்கு சற்றே சாதகம் இருக்கும், ஆனால் பேட்டிங்குக்கும் சொர்க்கமாக இருந்து வந்துள்ளது. அதாவது கொஞ்சம் முயற்சி எடுத்து வீசினால் பிட்சில் வேகத்தையும் பெற முடியும். பேட்டிங்கைப் பொறுத்தவரை 10-15 ஓவர் நின்று விட்டால் அப்புறம் பிரச்னை இல்லை என்ற ரக பிட்ச்தான் இது.

இந்த மைதானத்தில் கடந்த 8 போட்டிகளில் 7 போட்டிகளில் முடிவு தெரிந்தது. முதலில் பேட் செய்த அணி 4 முறை வென்றுள்ளது. இது ஒரு நியாயமான பிட்ச் இரு அணிகளுக்கும், பேட்டுக்கும் பந்துக்கும் நியாயமான, சரிசமமான பங்கு இருக்கும்.

தட்பவெப்ப நிலை:

லீட்ஸில் பொதுவாக ஓரளவுக்கு வெயில் அடிக்கும், அக்குவெதர் கணிப்பின் படி இன்று புதன் கிழமை முதல் நாள் ஆட்டம் வெயில் இருக்கும். தொடக்கத்தில் மேகமூட்டம் இருக்கும். 18 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். கடைசி 3 நாட்களில் மழை வர குறைந்தபட்ச சாத்தியம் உள்ளது. பொதுவாக முடிவுகள் தெரிந்து விடும் மைதானம்தான்.

First published:

Tags: India Vs England, Test match, Test series