• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • லஞ்ச் வருகிறது மெதுவாக ஆடுவோம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்: 107 பந்தில் 36 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா திட்டவட்டம்

லஞ்ச் வருகிறது மெதுவாக ஆடுவோம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்: 107 பந்தில் 36 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா திட்டவட்டம்

ஆலி ராபின்சனை நேர் ட்ரைவ் ஆடும் ரோகித் சர்மா

ஆலி ராபின்சனை நேர் ட்ரைவ் ஆடும் ரோகித் சர்மா

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா நேற்று 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து தன் முதல் ஆக்ரோஷ ஷாட்டில் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனாலும் நான் ஷாட்களை ஆடத் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

  • Share this:
    நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பந்துகளை ஸ்விங் ஆன பிறகு தாமதமாகச் சந்தித்ததால் பிழைத்தார், இங்கிலாந்து பந்து வீச்சு ஒரு கட்டத்தில் அவருக்கு சவாலாகவே இல்லை, மிகவும் அறுவையாக இருந்த சமயத்தில்தான் ஆலி ராபின்சன் பவுன்சரை ஹூக் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    ஆலி ராபின்சன் நிறுத்தி வைத்து எடுத்தார் என்றுதான் கூற வேண்டும், ரோகித்தும் கொஞ்சம் கூட தள்ளிச் செல்லாமல் நேராக குறிபார்த்து ஒரே வீரர் கரனிடம் அடித்தார்.

    Also Read: போன வேகத்தில் திரும்பி கோலி செய்த சாதனை.. தோனியை மிஞ்சிய கேப்டன்
     சேவாக் போன பிறகு அவரை போன்று ஒரு தொடக்க வீரர் வேண்டும் என்றுதான் பிரித்வி ஷாவைக் கொண்டு வந்தனர், அவரும் ஆரோக்கியமான அறிமுக டெஸ்ட்டுக்குப் பிறகு ஊக்க மருந்து தடை மற்றும் ஆஸ்திரேலியாவில் சொதப்பல் என்று அணியிலிருந்து நீக்கப்பட, சரி ரோகித் சர்மாதான் அந்த இடத்துக்கு உரித்தானவர் என்று தொடக்கத்தில் களமிறக்கப்பட்டார்.


    தார்ச்சாலை இந்திய பிட்ச்கள் நீங்கலாக அவர் வெளிநாடுகளில் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. நேற்று நன்றாக ஆடினார், ஆனால் அது ஒரு புஜாரா இன்னிங்ஸ்தான்.

    Also Read: India vs England| கோல்டன் டக் அடித்த கேப்டன் கோலி: நன்றாகத் தொடங்கி தடுமாறும் இந்தியா
     இந்நிலையில் ரோகித் சர்மா கூறும்போது, “நான் தொடர்ந்து என் ஷாட்களை ஆடுவேன், ஆனால் அத்தகைய ஷாட்களை ஆடி அவுட் ஆகும்போது ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதாவது ஒரு பந்தில் ஆட்டமிழப்பதற்கும் அதே பந்து பவுண்டரி செல்வதற்கும் இடையே நூலிழை இடைவெளிதான் உள்ளது. நாம் பாசிட்டிவ் மைண்ட்-செட்டிலதான் ஆட வேண்டும். உணவு இடைவேளைக்காக ஆட முடியுமா? அடிக்க வேண்டிய பந்து வந்தால் அடிக்க வேண்டியதுதான், அந்தப் பந்து என்னைப் பொறுத்தவரை பவுண்டரி பந்து.” என்றார்.

    ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி சரிவு கண்டது, புஜாரா, கோலி ஆட்டமிழந்தது பாதி ஆண்டர்சன் திறமை பாதி இவர்களின் திறமையின்மையே, ஆனால் சரிவுக்கு ரோகித் சர்மா மறைமுகக் காரணியானார்.

    அவ்வளவு நேரம் பொறுமையாக ஆடிவிட்டு கடைசியில் தூக்கி கையில் கொடுத்து விட்டு நான் என் ஷாட்களை ஆடுவேன் என்று ரோகித் சர்மா கூறுவது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: