Home /News /sports /

ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்ட் அபாரம்: இங்கிலாந்தை தட்டித் தூக்கிய இந்தியா

ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்ட் அபாரம்: இங்கிலாந்தை தட்டித் தூக்கிய இந்தியா

முதல் டி20: இந்தியா அபார வெற்றி

முதல் டி20: இந்தியா அபார வெற்றி

சவுத்தாம்டன் ஏஜியஸ் பவுலில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, வெற்றியின் சூத்திரதாரி ஹர்திக் பாண்டியா, இவர் பேட்டிங்கில் அதிரடி அரைசதம் அடித்ததோடு பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக அசத்தினார்.

மேலும் படிக்கவும் ...
    சவுத்தாம்டன் ஏஜியஸ் பவுலில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, வெற்றியின் சூத்திரதாரி ஹர்திக் பாண்டியா, இவர் பேட்டிங்கில் அதிரடி அரைசதம் அடித்ததோடு பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக அசத்தினார்.

    நல்ல பேட்டிங் பிட்சில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், இந்தியா அதிரடியில் தொடங்கியது, தீபக் ஹூடா (17 பந்தில் 33 ரன்), சூரியகுமார் யாதவ் (19 பந்தில் 39 ரன்) வெளுத்து வாங்க ஹர்திக் பாண்டியா (33 பந்தில் 51) அரைசதம் விளாசித்தள்ள இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்குச் சுருண்டது, ஹர்திக் பாண்டியா 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
    தினேஷ் கார்த்திக் 4 விக்கெட்டுகள் சாய காரணமாக இருந்தாலும் 3 கேட்ச்களை விட்டதால் இங்கிலாந்து 148 ரன்களுக்கு வந்தது, இல்லையெனில் வெற்றியின் மார்ஜின் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

    தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா விளாசல்:

    இங்கிலாந்து பவுலிங்கை முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா பதம் பார்த்தார். மொயீன் அலியை 2 பவுண்டரிகளுடன் ரோஹித் சர்மா 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து மொயீன் அலி பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்கள் என்று மொயின் அலி பந்தை ஸ்கூப் ஷாட் ஆடப்போய் பட்லரின் அட்டகாச பீல்டிங் செட் அப்பினால் பைன்லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

     Yuzvendra Chahal (2/32), Bhuvneshwar Kumar (1/10) and Harshal Patel (1/24) were the other wicket-takers.

    ஆனால் இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழக்கும் முன்பே 3ம்நிலையில் இறங்கிய தீபக் ஹூடா, தான் எதிர்கொண்ட முதல் 2 பந்துகளில் மொயீன் அலியை லாங் ஆனில் 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாசி தன் கணக்கைத் தொடங்கினார். சூரியகுமார் யாதவும் சிக்சருடன் கணக்கைத் தொடங்க இந்திய அணி பவர் ப்ளேயில் 66 ரன்களுக்கு 2 விக்கெட். மொயீன் அலியின் 2 ஓவர்களில் 26 ரன்கள் விளாசப்பட்டது 2 விக்கெட், ஆனால் இதோடு இவர் ஓவர் நிறுத்தப்பட்டது.

    ஹூடாவும் சூரியகுமார் யாதவும் ஓயாமல் போட்டு அடித்து கொண்டே இருந்தனர் இருவரும் சேர்ந்து 27 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தனர், அப்போது இங்கிலாந்தின் சிறந்த டி20 பவுலர் கிறிஸ் ஜோர்டான் தீபக் ஹூடா விக்கெட்டை வீழ்த்தினார். ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும், சூரியகுமார் யாதவும் 89/3-லிருந்து ஸ்கோரை அடுத்த 3 ஓவர்களில் 37 ரன்கள் விளாசி 11.4 ஓவர்களில் 137 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பாண்டியாவின் ஆஃப் சைடு டச் பவுண்டரிகள், பளார் பவுண்டரிகள் கண்ணுக்கு விருந்து.

    இந்த நிலையில் ஜோர்டான் ஷார்ட் பிட்ச் பந்து வீசி சூரியகுமார் யாதவை விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வீழ்த்தினார். சூரியகுமார் 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். சூரியகுமார் யாதவ் அவுட் ஆனவுடன் தினேஷ் கார்த்திக்கை இறக்கியிருந்தால் ஸ்கோர் 200 கடந்திருக்கும், ஆனால் அக்சர் படேலை இறக்கிய புதிர் என்னவென்று தெரியவில்லை.

    அக்சர் படேலை ஜோர்டான், டைமல் மில்ஸ், டாப்ளி முடக்கினர் அவர் 12 பந்துகளில் 17 ரன்களை 3 பவுண்டரிகளுடன் எடுத்தார். அதுவரை ஓவருக்கு 10 ரன்கள் என்று 10ம் வாய்ப்பாடு சொன்னது கடைசியில் 9 ரன்களாகக் குறைந்தது.

    ஒரு முனையில் ஹர்திக் கொஞ்சம் விரைவு ரன் எடுத்ததால் அக்சர் படேலின் ஸ்லோ தெரியவில்லை, கடைசியில்அக்சர் படேல் ஸ்பின்னர் பார்க்கின்சனிடம் அவுட் ஆன போது இந்தியா 17வது ஓவரில் 171/5, அடுத்த 3 ஓவர்களில் 17 ரன்கள் தான் வந்தது, காரணம் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 6 பவுண்டை ஒரு சிக்சருடன் 51 ரன்னில் டாப்லியிடம் காலியானார்.   தினேஷ் கார்த்திக் 2 அட்டகாசமான பவுண்டரிகளுடன் 7 பந்தில் 11 எடுத்ததால், இந்தியா 198/8.

    இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்ஜோர்டான் 4 ஒவர் 23 ரன் 2 விக்கெட் என்று சிக்கனம் காட்டினார்.

    புவனேஷ்வர் குமாரின் அட்டகாச நியூபால் பவுலிங், ஹர்திக் பாண்டியா அசத்தல் பவுலிங்:

    199 ரன்கள் இலக்கை அதிரடி இங்கிலாந்து விரட்டி விடும் என்றே கருதப்பட்டது, ஆனால் நியூபால் கிங் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவர் கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டியதாகும். ஜேசன் ராய்க்கு 4 அவுட் ஸ்விங்கரை வீசினார். 5வது பந்தில் கேப்டன் பட்லருக்கு ஒரு அட்டகாச இன்ஸ்விங்கரை வீச பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சரியாக உள்ளே வர பட்லர் கிளீன் பவுல்டு ஆனார். பட்லர் டக் அவுட்.

     The visitors then returned to dismiss England for 148 in 19.3 overs with Hardik (4/33) taking four wickets.
    புவனேஷ்வர் குமார் பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆன ஜாஸ் பட்லர்.


    அதிரடி வீரர் ஜேசன் ராய் 16 பந்துகள் ஆடினாலும் வெறும் 4 ரன்களில் கட்டிப்போடப்பட்டார், இவர் 4 ரன்களில் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியாவின் 3வது விக்கெட்டாக, இங்கிலாந்தின் 4வது விக்கெட்டாக வெளியேறினார். இடையில் 4 பவுண்டரிகளுடன் ஆக்ரோஷம் காட்டிய டேவிட் மலான் 21 ரன்களில் பாண்டியாவின் பந்தில் இன்சைடு எட்ஜில் பட்டு பவுல்டு ஆகி வெளியேறினார். அதே 5வது ஓவரில் அதிரடி மன்னன் லியாம் லிவிங்ஸ்டன் பெடல் ஸ்வீப் ஆட நினைத்து ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்தார், ஹர்திக் கொஞ்சம் வைடாக வீச ஷாட் நேராக தினேஷ் கார்த்திக் வசம் கேட்ச் ஆனது. லிவிங்ஸ்டன் டக் அவுட். இங்கிலாந்து 33/4 என்று ஆனது.

    அதன் பிறகு ஹாரி புரூக் (28, 23 பந்துகளில்), மொயீன் அலி (20 பந்துகளில்ல் 36) இறங்கி விளாசித் தள்ள 6 ஓவர்களில் 61 ரன்கள் விளாச இங்கிலாந்து 94 ரன்களை 12 ஓவர்களில் எட்டியது, ஆனால் செஹல் இருவரையும் வெளியேற்றினார். கடைசியில் கிறிஸ் ஜோர்டான் 26 ரன்களை சடுதியில் எடுத்தார், இங்கிலாந்து கடைசி 5 விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு இழந்து 148ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள், செஹல் 2 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட். புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட். அக்சர் படேலுக்கு சாத்து 2 ஓவர் 23 ரன்கள் விக்கெட் இல்லை. கார்த்திக் 3 கேட்ச்களை விடவில்லை எனில் இன்னும் முன்னாலேயே இங்கிலாந்து கதை காலியாகியிருக்கும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, India Vs England, T20

    அடுத்த செய்தி