முகப்பு /செய்தி /விளையாட்டு / கோலி ஆடுவது சந்தேகம்- கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஒரே தோல்விதான் - அதிரடி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

கோலி ஆடுவது சந்தேகம்- கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஒரே தோல்விதான் - அதிரடி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி இன்று.

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி இன்று.

டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு டி20 தொடரை 2-1 என்று இந்தியா வென்றது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், இன்று ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு அதிரடி மன்னர்கள் பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்தியாவை டெஸ்ட் போட்டியில் காயவிட்ட ஜோ ரூட் அகியோர் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியது இந்திய அணிக்குப் பெரிய சவாலே.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு டி20 தொடரை 2-1 என்று இந்தியா வென்றது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், இன்று ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு அதிரடி மன்னர்கள் பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்தியாவை டெஸ்ட் போட்டியில் காயவிட்ட ஜோ ரூட் அகியோர் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியது இந்திய அணிக்குப் பெரிய சவாலே. இந்திய அணியில் விராட் கோலி காயம் காரணமாக ஆடுவது சந்தேகமாகியுள்ளது, இது ஒரு மறைமுக ஆசீர்வாதமே.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஒரு காட்டடி அணியாக மாறிவிட்டது. பட்லர் கேப்டன்சியில் ராய், பேர்ஸ்டோ, ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லே என்று ஒரு பெரிய காட்டடி கூட்டமே உள்ளது, இதில் அற்புத ஸ்விங் பவுலர் புவனேஷ்வர் குமார் இல்லாமல் இந்திய அணித்தேர்வு மோசமான முடிவு எடுத்துள்ளது. ஆனால் பிரசித் கிருஷ்ணா, ஷமி வருகை வலு சேர்த்தாலும் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ரூட் இருக்கும் பார்மில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

இங்கிலாந்து அணி கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 498 ரன்கள் குவித்து புதிய ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனை படைத்தது. இந்தியாவும் சொற்பமல்ல, ஏனெனில் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 6-ல் இந்தியா வென்றுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸை 3-0 என்று வென்றதும் அடங்கும்.

ஷிகர் தவான் ரோஹித் சர்மாவுடன் இறங்குகிறார், இது நிச்சயம் ஒரு நிலைத்தன்மையை டாப் ஆர்டரில் வழங்கும் ஷிகர் தவான் இந்த கிரவுண்டில் அருமையான ரெக்கார்ட் வைத்துள்ளார். இந்திய அணிக்கு இன்னொரு சாதக அம்சம் ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ஆடுகிறார், சூரியகுமார் யாதவ்வின் 3வது டி20 போட்டியின் வாண வேடிக்கை அதிரடி அற்புத சதம், ஸ்ரேயஸ் அய்யரின் இடத்தைப் பறித்து இவரிடம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர் (கோலி இருந்தால் இவர் இருப்பது கடினம்), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, செஹல்

இங்கிலாந்து உத்தேச லெவன்: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், டேவிட் வில்லே, ரீசி டாப்லி, மேட் பார்கின்சன்.

First published:

Tags: India Vs England, ODI, Rohit sharma, Virat Kohli