இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக ஓவலில் மாலை 5:30 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில் அச்சமற்ற அணுகுமுறைதான், அதிரடி ஆட்டம்தான் வருவது வரட்டும் என்ற அணுகுமுறையில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 103 முறை இரு அணிகளும் மோதியதில் இந்தியா 55 வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கமே செலுத்தி வருகிறது. இதே ஆதிக்கத்தை தொடரவிருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“அனைத்துப் போட்டிகளுமே எங்களுக்கு முக்கியம்தான். ஒருநாள் போட்டிகள் இப்போதைக்கு முக்கியத்துவம் இல்லை என்று யார் சொன்னது? ஆனால் ஒவ்வொரு வீரரின் பணிச்சுமையையும் நாங்கள் கவனமேற்கொள்ள வேண்டியுள்ளது. மாற்றங்கள் செய்வோம், ஆனால் வெற்றி பெறுவதுதான் குறிக்கோள். வெற்றி பெறும் மன நிலையை விட்டு விட்டு ஆட மாட்டோம்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டத்தை இளம் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும், 50 ஓவர் கிரிக்கெட் டி20-யின் ஒரு நீட்சிதான். ஆனால் டி20 கிரிக்கெட்டை ஒப்பிடும்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவாக ரிஸ்க் எடுக்க மாட்டோம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். எனவே அச்சமற்ற கிரிக்கெட் என்பதில் மாற்றமில்லை.
டி20 தொடர் வெற்றியில் மிக முக்கியமானது அனைவரும் ஆட முடிந்ததே. அளிக்கப்பட்ட வாய்ப்பை எப்படி அவர்கள் மகிழ்வுடன் ஏற்று ஆடுகின்றனர் என்பதைப் பொறுத்துதான் விஷயம் அடங்கியிருக்கிறது.
ஆடிய அனைத்து வீரர்களுமே பயமற்ற முறையில் ரிஸ்க் எடுத்து ஆட, துணிச்சலாக ஆட விரும்புகின்றனர் என்பது தெரிந்தது. நான் சில புதிய வீரர்களிடம் பேசிய போதும் அவர்களும் அச்சமற்ற கிரிக்கெட் பற்றித்தான் என்னிடம் பேசினர்.
நிச்சயம் அச்சமற்ற அணுகுமுறை என்று வந்து விட்டால் ஆட்டத்தின் முடிவுகள் கொஞ்சம் முன்னும் பின்னுமாகவே இருக்கும். முடிவுகளைப் பற்றி அஞ்சாமல் பெரிய பின்புலத்தில் யோசித்தால் ஆக்ரோஷம் என்பதை சாதித்துதான் ஆகவேண்டும் என்பதே முடிவு. ஆனால் இதை சாதிக்கும் போது சில மிஸ்டேக்குகள் நடக்கவே செய்யும்.
இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, ODI, Rohit sharma