நடுவரிடம் ஆவேசம்: தடை செய்யப்படுகிறார் விராட் கோலி?

நடுவரிடம் ஆவேசம்: தடை செய்யப்படுகிறார் விராட் கோலி?

கோலி.

உடனேயே மேனனிடம் சென்று விராட் கோலி ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் செயல் ஆட்ட நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது 3ம் நாள் ஆட்டத்தில் நடுவர் நிதின் மேனனுடன் விராட் கோலி ஆவேசமாக வாதிட்டுக் கொண்டிருந்தார்.

  ஜோ ரூட்டுக்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை என்பதற்காக அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார் கோலி. நடுவருக்கென்று விதிமுறைகள் உள்ளன, அதன்படிதான் அவர் செயல்பட முடியும், கோலி கேட்டால் அவுட் கொடுக்க முடியுமா? ஆனால் கோலி அப்படித்தான் நினைக்கிறார், நடந்து கொள்கிறார்.

  ரூட்டுக்கு நடுவர் நாட் அவுட் என்றார் ரீப்ளேயில் அம்பயர்ஸ் கால் என்று வந்து விட்டது, இதைத்தான் கோலி கடுமையாக எதிர்த்தார். பந்து மட்டையில் படவில்லை. கால்காப்பில் பட்டது. அக்சர் படேலின் அந்த பந்து ஸ்டம்பைத் தாக்குவதாக ரீப்ளேயில் காட்டியது, ஆனால் அம்பயர் நாட் அவுட் என்றதால் அது நாட் அவுட். இதில்தான் கோலி கடுப்பாகி விட்டார்.

  உடனேயே மேனனிடம் சென்று விராட் கோலி ஆவேச வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் செயல் ஆட்ட நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐசிசி நடத்தை விதிகளின் படி கோலியாக இருந்தாலும் தோனியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நடுவர் தீர்ப்புக்கு வாக்குவாதம் புரிந்தால் தடை செய்யப்பட வேண்டும். ஆனால் கோலி பவர்ஃபுல் அதனால் தடை வராது என்றே சொல்லலாம். ஐசிசியில் இந்திய கிரிக்கெட் வாரியம் செல்வாக்கு மிக்கது என்பதோடு இந்திய கிரிக்கெட் நலன்களுக்கு எதிராக எந்த முடிவையும் ஐசிசி எடுக்காடு என்பதையும் ஆழமாக நம்பலாம்.

  கோலி இப்போது லெவல் 1 மற்றும் லெவல் 2 தவறிழைத்திருக்கிறார், இதற்கு அவருக்கு நியாயமாக விதிப்படி 1 முதல் 4 தகுதியிழப்புப் புள்ளிகள் அளிக்கப்பட வேண்டும். கடந்த 24 மாதங்களில் 2 தகுதியிழப்புப் புள்ளிகளைப்பெற்றுள்ளார். இன்னும் 2 தகுதியிழப்புப் புள்ளிகளை அவர் பெற்று விட்டால் ஒரு டெஸ்ட் போட்டிக்கு அவர் தடை செய்யப்படுவார். மேலும் கோலியின் இந்தச் செயலுக்கு அவர் மீது கடும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டாக வேண்டும்.

  இது தொடர்பாக வர்ணனையாளர் டேவிட் லாய்ட் கூறும்போது, “நடுவரிடம் இப்படி வாக்குவாதம் புரிந்து பார்வையாளர்களை ரசிகர்களைத் தூண்டிவிடக் கூடாது. அவர் ஒரு கேப்டனாக நல்ல முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இந்திய அணியில் யாராவது அவரிடம் பேச வேண்டும். ஆட்ட நடுவரும் இதைக் கவனிக்க வேண்டும். அவர் வேண்டுமென்றே இதைச் செய்கிறார், அது பார்க்க அசிங்கமாக உள்ளது” என்று சாடினார்.

  மற்றொரு முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறும்போது, “கோலி ஒரு பவர் ஹவுஸ் அவர் போய் இப்படி நடந்து கொள்ளலாமா? நடுவரை அவர் அச்சுறுத்தக் கூடாது. அவுட் ஆக இருக்கலாம், மோசமான தீர்ப்பாக இருக்கலாம் நடுவரிடம் இப்படி மோசமாக நடந்து கொள்வது அவரது தகுதிக்கு அழகல” என்று சாடினார்.
  Published by:Muthukumar
  First published: