ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு…

வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி… இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு…

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில், குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி நூலிழையில் வெற்றியைத் தவற விட்டு, தொடரை இழந்தது.

இந்த சூழலில் ஆறுதல் வெற்றிக்காக நாளை 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டி சட்டோகிராம் நகரிலுள்ள அகமது சவுத்ரி மைதானத்தில், இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்க உள்ளது.

‘இந்தியாவை ஒயிட் வாஷ் அடிப்பதுதான் எங்கள் இலக்கு’ - வங்கதேச பயிற்சியாளர் பேட்டி

காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, கே.எல். ராகுல் கேப்டனாக அணியை வழி நடத்துகிறார்.

இந்நிலயில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான குல்தீப் சென் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேச வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுவரை இந்திய அணியை வங்கதேசம் ஒயிட் வாஷ் செய்தது கிடையாது. இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

AUS VS WI TEST : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி….

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன்) (WK), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

First published:

Tags: Kuldeep Yadav