ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்… களத்தில் இறங்கும் இந்திய வீரர்கள் யார்?

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்… களத்தில் இறங்கும் இந்திய வீரர்கள் யார்?

இந்திய டெஸ்ட்கிரிக்கெட் அணி

இந்திய டெஸ்ட்கிரிக்கெட் அணி

வேகப்பந்து வீச்சை பொருத்தளவில் ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் மற்றும் முகம்மது சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் களத்தில் இறங்கும் 11 இந்திய வீரர்கள் யார் என்கிற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் அடுத்ததாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு, உலக டெஸ்ட் சாம்பியன் ஃபைனலில் பங்கேற்க வாய்ப்புகள் பிரகாசம் அடையும்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஃபைனலுக்கு முன்னேறும் அணி எது? வல்லுனர்களின் ப்ரெடிக்சன்…

இதனால், இந்த 2 போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன ரோஹித் சர்மா காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழி நடத்தவுள்ளார். துணை கேப்டனாக புஜாரா செயல்படுவார்.

ராகுலே விக்கெட் கீப்பராக இருக்கிறார். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளுக்கு முழு நேர விக்கெட் கீப்பர் தேவைப்படுவதால் இந்த போட்டியில் ரிஷப் பண்ட் களம் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்யலாம். இவர்களுடன் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் என 6 பேட்ஸ்மேன்களைக் கொண்டதாக இந்திய அணி களம் காண வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதியில் மோதும் குரோஷியா – அர்ஜென்டினா… நள்ளிரவில் தொடங்குகிறது போட்டி

அடுத்ததாக அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் சுழல் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருவதால் இவர்கள் அணியில் இருந்தால் கூடுதல் பலம் என்றே கருதலாம்.

வேகப்பந்து வீச்சை பொருத்தளவில் ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் மற்றும் முகம்மது சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில், கே.எல். ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அக்சர் படேல், அஷ்வின், உமேஷ் யாதவ், சிராஜ், ஷர்துல் தாகூர் என இந்த 11 வீரர்கள் நாளை முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடலாம். 5 பவுலர்களைத் தவிர்த்து ஷ்ரேயாஸ் அய்யரும் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படலாம்.

First published:

Tags: Cricket, Indian cricket team