இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை அந்நாட்டிடம் இழந்த நிலையில், கடந்த புதன் அன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 404 ரன்களும், வங்கதேசம் 150 ரன்களும் எடுத்தன.
254 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் நஜ்முல் மற்றும் சகீர் ஹசன் நிதானமாக ஆடி வங்கதேச அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 124 ரன்கள் சேர்த்த நிலையில் நஜ்முல் 67 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகீர் ஹசன் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: உலகமே எதிர்பார்த்திருக்கும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..மெஸ்ஸியின் கோப்பை கனவு நனவாகுமா?
இதன் பின்னர், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல், குல்தீப் யாதவ் பந்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் மட்டும் கடைசி வரை போராடி 84 ரன்கள் எடுத்து பின்னர் ஆட்டம் இழந்தார். இறுதியால் நான்காம் நாளான இன்று வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket match, India vs Bangladesh, Indian cricket team, Kuldeep Yadav, Test cricket