ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

 இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

இந்திய அணியில் முக்கிய மாற்றம்?

Ind vs Ban | இந்தியா - வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நாளை (டிசம்பர் 22) தொடங்க உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டாக்கா மைதானத்தில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரை வெல்லும்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய அணி வலுவாக இருந்தது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வேகப்பந்தில் சிராஜ் சிறப்பாக பந்துவீசினர். பேட்டிங்கை பொறுத்த வரை இளம்வீரர் சுப்மன் கில், அனுபவ வீரர் புஜாரா மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் உள்ள இந்திய அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

Also Read : கோப்பையுடன் கொண்டாட்டம்.. தலையில் சிக்க இருந்த கேபிள்.. நூலிழையில் தப்பித்த மெஸ்ஸி.. அதிர்ச்சி கொடுத்த வீடியோ!

முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா 2 இன்னிங்சிலும் அரைசதம் விளாசி தனது ஃபார்மை மீண்டும் நிருபித்துள்ளார். அதே போல் மிடில் ஆர்டரில் ஸ்ரோயஸ் ஐயர் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். டாக்கா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அக்ஷர் படேலுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்திய உத்தேச அணி : கே.எல்.ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், குல்திப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்

First published:

Tags: Ind vs Ban, India vs Bangladesh