வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; கேப்டன் ரோஹித் 83 நாட்-அவுட்!

 • News18
 • | September 22, 2018, 00:08 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 YEARS AGO

  AUTO-REFRESH

  0:6 (IST)

  வங்கதேசத்துடனான இந்த வெற்றி, இந்திய அணிக்கு ஆசியக்கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. வரும் செப்டம்பர் 23-ல் இந்திய அணி பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.

  23:59 (IST)

  தினேஷ் கார்த்திக் வின்னிங் ஷாட் அடித்தார். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் ஷர்மா 83 ரன்களுடன் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார்.

  23:42 (IST)

  வெற்றியின் விளிம்பில் இருந்தபோது ரசிகர்கள் தோனி சிக்ஸர் அடித்து வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுண்டு. அதேபோல் இன்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தோனியும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மஸ்ரஃபீ ஓவரில் இறங்கி வந்து அடித்தார். பந்து ஆப் சைடு லாங் ஆனில் கேட்ச் சென்றது. 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  23:35 (IST)

  மொர்டசா ஓவரில் 3 ரன்கள் மட்டுமே அடித்தனர். 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.

  23:31 (IST)

  முஸ்தஃபிசுர் தனது 6-வது ஓவரை நிறைவு செய்தார். ரோஹித், தோனி ஜோடியை அசைக்க முடியவில்லை. 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி.

  23:29 (IST)

  ரோஹித் சர்மாவும், தோனியும் இணைந்து 50 ரன்களை சேர்த்துள்ளனர். ஒரு நாள் போட்டியில் தோனியும், ரோஹித் ஷர்மாவும் இணைந்து எடுத்த 8-வது 50 இது. இருவரும் இணைந்து முதல்முறையாக பங்களாதேஷ்க்கு எதிராக 50 ரன்களை அடித்துள்ளனர். பங்களாதேஷ்க்கு எதிராக 3வது விக்கெட் பார்னர்ஷிப்பில் முதல்முறை 50 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

  23:24 (IST)

  இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது. தோனி 4 ரன்களை விளாசி இந்தியா அணியை 150 ரன்களை கடக்க வைத்தார்.

  23:17 (IST)

  ரூபல் ஹுசைன் ஓவரில் 7 ரன்கள் அடித்தனர். இந்திய வீரர்கள் பொறுமையாக மோசமான பந்துகளுக்காக காத்திருந்து அடித்து வருகின்றனர். வெற்றிக்கு 32 ரன்கள் மட்டுமே தேவை.

  23:15 (IST)

  ரோஹித் மிட்-விக்கெட்டில் ஒரு ஃபோர் அடித்தார். இந்திய ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

  23:13 (IST)

  29-வது ஓவரில் 4 சிங்கிள் மட்டுமே அடித்தனர். முஸ்தஃபிசுர் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. பங்களாதேஷ் அணி தோனி, ரோஹித் பார்ட்னர்ஷிப்பை உடைக்க கடுமையாக போராடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் மட்டுமே தேவை.